இந்திய திருநாட்டின் 75 வது ஆண்டு சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் வகையில் கராத்தே மாணவர்கள் 75 நிமிடங்களில் 75 மூமெண்ட்களை செய்துக் காட்டி உலக சூப்பர் திறமை புத்தகத்தில் இடம் பெறும் நிகழ்ச்சி ஆவடி அடுத்த அயப்பாக்கத்தில் நடைப்பெற்றது.
செய்தி சேகரிப்பு ஆவடி ராஜன்
ஆவடி, ஆக.16 –
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த அயப்பாக்கம் தணக்கில்லா மைதானத்தில் World Super Talent Book of Records உலக சூப்பர் டேலண்ட் புக் ஆஃப் ரெக்கார்டில் இடம் பெறும் உலக சாதனை முயற்சியாக எஸ். எஸ். கே. எஃப் இன்ஸ்டெக்டர் வெங்கட்ராகவன் தலைமையில் இன்டர்நேஷனல் ஸ்போர்ஸ் மற்றும் ட்ரெடிஷனல் கராத்தே ரிசர்ச் அண்ட் டெவலப்மன்ட் டிரஸ்ட் தமிழ்நாடு சார்பாக இந்தியன் கராத்தே சாம்பியன் ஆப் தமிழ்நாடு இணைந்து 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 மாணவர்கள் 75 அடி தேசிய மூவர்ணக் கொடியை கையில் ஏந்தி ஊர்வலமாக வந்து 75 கராத்தே வீரர்கள் 75 நிமிடத்தில் 75 வகையான கராத்தே நுணுக்கங்களை செய்து வேர்ல்டு சூப்பர் புக் ஆஃ ரெக்கார்டு உலக சாதனை அமைப்பில் உலக சாதனை படைத்தனர்.
இந்த நிகழ்வினை சர்வதேச விளையாட்டுகள் மற்றும் பாரம்பரிய தற்காப்பு கலை மற்றும் ஆராய்ச்சி டெவலப்மெண்ட் டிரஸ்ட் ஆப் தமிழ்நாடு தலைவர் டாக்டர் சேலம் கராத்தே நடராஜ் மற்றும் திரைப்பட ஸ்டண்ட் நடிகர் விஜய் பாஸ்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சாதனையை நிகழ்த்திக் காட்டிய கராத்தே மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் கேடயங்களை வழங்கி சிறப்பித்தனர்.
இதில் கராத்தே மாணவர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் கலந்துக் கொண்டு வியப்புடன் கண்டுகளித்தனர். மேலும் சாதனைப்படைத்த மாணவர்களுக்கு தங்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.