மீஞ்சூர், மார்ச். 31 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு ஊராட்சியில் ஜுவாரி சிமெண்ட் நிறுவனத்தின் சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 52 இலட்சம் மதிப்பீட்டில், அப்பகுதியில் புதிதாகப் போடப்பட்டுள்ள சாலைகள், மற்றும் சமையலறை, கலைஞர் அரங்கம், உள்ளிட்ட புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள கட்டடங்கள் ஆகியவற்றை மக்கள் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கும் விதமாக அதற்கான திறப்பு விழா அவ்வூராட்சி வளாக அரங்கத்தில் நடைப்பெற்றது.
மேலும் இவ்விழாவில் பங்கேற்ற ஜூவாரி சிமெண்ட் நிறுவனத்தின் பொது மேலாளர் நரேந்திர பிரசாத் திறந்து வைத்தார். மேலும், இவ்விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எம் டி ஜி கதிர்வேல், ஒப்பந்ததாரர் கருணாகரன், ஒருங்கிணைப்பாளர் தங்கமணி, உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.
அதனைத் தொடர்ந்து இவ்விழாவினை நினைவுப் படுத்தும் வகையில் அப்பகுதியில் மரக்கன்றுகளும் நடப்பட்டது. மேலும் இதில் ஊராட்சி செயலர் பொற்கொடி முருகானந்தம், வார்டு உறுப்பினர்கள் கோமதிநாயகம், துளசி பாய் சுந்தரம், சங்கர், அஸ்வினி தேவதாஸ், பரிமளா கஜேந்திரன், தீபன் சக்கரவர்த்தி, விஜயா சிவகுமார், உள்ளிட்டவர்களும் மேலும் திரளான அப்பகுதி மக்களும் கலந்து கொண்டனர்.