திருவாரூர், மார்ச். 16 –

திருவாரூர் நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல முதுநிலை மேலாளர் அலுவலகம் முன்பாக நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக இயக்கம் செய்யக்கோரி அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் மாநில செயலாளர் கே.சிவன் தலைமையில் நடைபெற்றது.

மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அண்ணா தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து கூறிய மாநில செயலாளர் கே சிவன் …

தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையங்களிலும் சுமார் 50,000 நெல் மூட்டைகள் வீதம் 30 நாட்களாக தேக்கமடைந்துள்ளது. எனவும் இதனால் நெல் கொள்முதல் நிலைய பணியாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், மேலும் இதனால் ஏற்படும் இழப்பீடுகளை பணியாளர்கள் தலையில் சுமத்தாமல், நிர்வாகமே ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அப்போது அவர் தெரிவித்தார்.

மேலும் உடனடியாக நெல் மூட்டைகளை இயக்கம் செய்யவில்லை எனில் தொடர் போராட்டங்கள் நடைபெறும் எனவும் தெரிவித்தார் .மேலும் இன்று நடைப்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் எம். ஆர். பாலாஜி, மண்டல தலைவர் சுரேஷ்குமார், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் பொன் வாசுகிராம், மண்டல இணைச்செயலாளர் சுப்ரமணியன், மாநில இணைச்செயலாளர் தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் பி.கே.யு. மணிகண்டன், செந்தில்வேல், அலுவலக செயலாளர் ராமதாஸ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

பேட்டி:மாநில செயலாளர் கே.சிவன்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here