கிருஷ்ணகிரி, பிப். 27 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கருமலை தம்பி …

பாரதப் பிரதமர் அமிர்த் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் ரூ.19,000 கோடி செலவில் 553 ரயில் நிலையங்களை மறுவடிவமைப்பு செய்ய அடிக்கல் நாட்டி, கோமதிநகர் ரயில் நிலையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

அதன் ஒரு பகுதியாக ஓசூர் ரயில் நிலையத்திற்கு 22.35 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிக்கு பிரதமர் காணொளி மூலம் தொடங்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக்குமார் மற்றும் மாநில பாஜக செய்தி தொடர்பாளர் நரசிம்மன் மற்றும் மாவட்ட காங்கிரஸ் பாஜக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்

நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் செல்லக்குமார் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்நாட்டில் எந்த ஒரு அரசு விழாவாக இருந்தாலும் அதில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதுதான் வழக்கமாகக் கொண்டிருக்கும் ஆனால் இங்கு தமிழ் தாய் வாழ்த்து பாடாதது மொழியினை அவமதிப்பாகும் என்றார். மேலும் அதனை தாம் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய செல்வகுமார் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான மாநகர மேயரை அழைக்கவில்லை அதேபோல் சட்டமன்ற உறுப்பினரை அழைக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி அதனையும் வன்மையாக கண்டிக்கிறேன் என தெரிவித்தார், தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த கல்வெட்டை திறந்து வைத்தார்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here