சென்னை, அக். 21 –

குமரிக்கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழத்தில் உள்ள 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை தகவல் மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் குமரிகடல் பகுதியை ஒட்டி நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், நென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு ஆகிய 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பரவலாக பெய்யக் கூடும் எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான மழைப் பெய்யக் கூடும் என்றும் வெப்ப நிலையை பொறுத்தவரை அதிகப்பட்சமாக 35 மற்றும் குறைந்த பட்சம் 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு சென்னை வானிலை ஆய்வு மையத்தில் தென்காசி மாவட்டம் சங்கரகோவில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையிலும் தலா 9, ராணிப்பேட்டை மாவட்டத்தில் சோளிங்கரில் 8, திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட், கல்லக்குறிச்சி மாவட்டம் காவனூர், தேனி மாவட்டம் மஞ்சளாறு ஆகிய இடங்களில் தலா 7, தஞ்சாவூர் மாவட்டம் வல்லம், நாக்கல் மாவட்டம் மங்களபுரம் நீலகிரி மாவட்டம் குன்னூர், சாம்ராஜ் எஸ்டேட், தலா 6, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, கெட்டி, ஜி பஜார், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் தலா 5 திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், நீலகிரி மாவட்டம் குந்தாபாலம், பர்லியார் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், வடபுதுப்பட்டு  கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம், விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, கரூர் மாவட்டம் கடவூர், ஈரோடு மாவட்டம் பவானிசாகர், கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர், சின்னக்கல்லார், தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சை, கரூர் மாவட்டம் பாலவிடுதி, தேனி மாவட்டம் கூடலூர் தலா 4 செ.மீட்டர் அளவில் மழை பதிவாகிவுள்ளது என அத்தகவல் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ள்ளது

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here