படவிளக்கம் நேற்று மார்ச் – 29 -2022 சிப்காட் தொழிற்பேட்டை அருகே கார்பன் தயாரிப்பு தொழிற்சாலையில் வெளியேறிய கரும்புகையால் பாதிக்கப்பட்ட பாப்பன்குப்பம் கிராம மக்கள் 50 க்கும் மேற்பட்டவர்கள் தொழிற்சாலை முன்பு முற்றுகையில் ஈடுப்பட்ட போது

சிப்காட் தொழிற்பேட்டை, கார்பன் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கரும்புகையால் மூச்சுத்திணறல் ஏற்படுவதாக புகார் தெரிவித்து 50 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அத்தொழிற்சாலை முன்பு முற்றுகையிட்டனர்.

கும்மிடிப்பூண்டி, மார்ச். 30 –

கும்மிடிப்பூண்டி அடுத்த சித்தராஜ் கண்டிகை ஊராட்சியில் பாப்பன்குப்பம், கோபால்ரெட்டி கண்டிகை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 1000 க்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாப்பன்குப்பம் ஒட்டி கார்பன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் நேற்று மாலை அதிக அளவு கார்பன் துகள்கள் பாப்பன்குப்பம் கிராமத்தில் முழுவதும் பரவியது. இதை அறிந்த 50 க்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் தொழிற்சாலை முன்பு முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் எங்கள் பகுதியில் அதிக அளவு கரும்புகை, துகள்கள் படிந்து சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உள்ளது. என்று கூறியுள்ளார்கள்.  தொழிற்சாலை நிர்வாகம்  கரும்புகை வெளியேறாமல் தடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். பின்னர் கூட்டம் கலைந்து சென்றனர்.  இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here