கும்பகோணம், மார்ச். 21 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள அழகாபுத்தூரில் 2 குடிசை வீடுகள் தீ பற்றி எரிந்தது. அத் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு தலைமை கொறடா நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து அவர்களுக்கு நிவாரணம் வழங்கினார்.

திருவிடைமருதூர் தாலுகா, நாச்சியார் கோவில் அடுத்துள்ள அழகாபுத்தூர் கீழத் தெருவில் வசித்து வரும் முத்துசாமி மகன் வெங்கட்ராமன் வீடும், கணேஷ் மகன் செந்தில் வீடும் நேற்று  அடுப்பில் சமைத்துக் கொண்டிருந்த போது  தீப்பொறி பட்டு அருகில் இருந்த வெங்கட்ராமன், செந்தில்,  ஆகியோரின் 2 வீடுகளும் மள மள வென தீ பற்றி எரிந்து சாம்பலானது.. அத் தகவலயறிந்து சம்பவயிடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மேலும் தீ பரவாமல் இருக்க தண்ணீர் பீச்சியடித்து அத் தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அத் தீ விபத்தில் அவர்கள் இருவரின் வீட்டில் வைத்திருந்த அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து சாம்பலாகின. மேலும் அதன் மதிப்பு சுமார் 3 லட்சம் இருக்கும் என தகவல்கள் தெரிய வருகிறது.

இந்நிலையில் அத்தகவலயறிந்த அரசு தலைமை கொறடா கோவி செழியன், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து தொடர்ந்து அவர்களுக்கு புடவை, வேஷ்டி, பெட்ஷீட் அரிசி, பருப்பு மற்றும் ரூ 3000  வழங்கினார். அப்போது மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், திருவிடைமருதூர் ஒன்றிய பெருந்தலைவர் சுபா திருநாவுக்கரசு, ஒன்றிய துணை பெருந்தலைவர் பத்மாவதி கிருஷ்ணகுமார், ஒன்றிய செயலாளர் குகூர் அம்பிகாபதி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சரவணன், ஊராட்சி பொறுப்பாளர் கண்ணப்பன், மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அவருடன் உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here