கும்பகோணம், ஏப். 30 –

வணிக நிறுவன பெயர் பலகைகள் மற்றும் விளம்பர பலகைகள், தமிழில் பிரதானமாக இருக்க வேண்டும் என்ற சட்டம் முறையாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும், 10ம் வகுப்பு வரை தமிழகத்தில் தமிழ் தான் பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும்,  தமிழ் மொழி பாடமாக இல்லாத பள்ளிகளை தமிழக அரசு அனுமதிக்க கூடாது என்றும்,  கும்பகோணத்தில் தமிழ் இலக்கிய பேரவை சார்பில் நேற்று மாலை நடைபெற்ற பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க வருகை தந்த தமிழ்தேசிய பேரியக்க ஒருங்கிணைப்பாளர் பெ மணியரசன் தெரிவித்தார்.

நேற்று மாலை கும்பகோணம், தனியார் திருமண மண்டபத்தில், தமிழ் இலக்கிய பேரவை சார்பில்,  பாவேந்தர் பாரதிதாசன் 131வது பிறந்தநாள் விழா நடைப்பெற்றது. இவ்விழாவிற்கு முத்து அரங்க பொன்முடி தலைமையிலும், அருளானந்தம் வரவேற்க சிறப்பாக தொடங்கியது.

இதில் மாணவி தமிழினி தமிழ் தாய் வாழ்த்து இசைக்க, பாவேந்தர் பாடலுக்கு மாணவி பொற்குழலி நடனம் ஆடினார். தொடர்ந்து பாவேந்தரின் திருவுருவப்படத்திற்கு அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து நடந்த விழாவில், பெ பூங்குன்றன் சிறப்புரையாற்ற,  தக்கார் ம சோ விக்டர் தமிழே ஆட்சி மொழி என்ற தலைப்பிலும், தமிழ் தேசிய பேரியக்க ஒருங்கிணைப்பாளர் பெ மணியரசன், சங்கே முழங்கு என்னும் தலைப்பிலும் உரைநிகழ்த்தினர்,.

இவ்விழாவில், கோ வளவன், கி சேரமான் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்க, நிகழ்ச்சிகளை நா வைகறை ஒருங்கிணைக்க, நிறைவாக, கார்த்திக் இமயம் நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்கிடையே, செய்தியாளர்களை சந்தித்த தமிழ்தேசிய பேரியக்க ஒருங்கிணைப்பாளர் பெ மணியரசன், தமிழகத்தில் இருமொழிக் கொள்கையை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் எனவும்,  வணிக நிறுவன பெயர் பலகைகள் மற்றும் விளம்பர பலகைகள், தமிழில் பிரதானமாக இருக்க வேண்டும் அதாவது 3ல் 2 பங்கு பெரிய தமிழ் எழுத்திலும், 3ல் ஒரு பங்கு பிற மொழியிலும் இருக்க வேண்டும் என்ற சட்டம் முறையாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும், குறிப்பாக சென்னையில் தமிழ் பெயர் பலகைகளையே காண முடிவில்லை என்றும், இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், 10ம் வகுப்பு வரை தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும், தமிழ் தான் பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும், தமிழ் மொழி பாடமாக இல்லாத பள்ளிகளுக்கு தமிழக அரசு அனுமதிக்க கூடாது என்றும் அதற்குரிய சட்டங்களை தமிழக அரசு இயற்றிட வேண்டும் இது தான் இன்றைய இந்தி திணிப்பிற்கு சரியான எதிர்நடவடிக்கையாக அமையும் என்றும், சமஸ்கிருதம் உள்ளிட்ட பிற மொழி பெயர்களுக்கு இணையான தமிழ் பெயர்கள் கொண்ட பட்டியலையும் தமிழக அரசு வெளியிட வேண்டும் என்றும் பெ. மணியரசன் மேலும் தெரிவித்தார்.

 

பேட்டி : பெ மணியரசன் ஒருங்கிணைப்பாளர்,

தமிழ்தேசிய பேரியக்கம்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here