ராமநாதபுரம், செப். 7ராமநாதபுரத்தில் சுகம் அறக்கட்டளை சார்பில் இலவச வலி நிவாரண வர்ம சிகிச்சை மருத்துவ முகாம் நடந்தது. ராமநாதபுரம் சுகம் ஆயுர்வேத மருத்துவமனை, சுகம் அறக்கட்டளை, ஆர்.கே ஆயர்தாம் ஆரோக்ய நிலையம் இணைந்து வலி நிவாரண வர்ம சிகிச்சை மருத்துவ முகாம் நடத்தினர். ராமநாதபுரம் பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள ஆயுர்தாம் ஆரோக்ய நிலையத்தில் நடந்த வர்ம சிகிச்சை வைத்திய முகாமிற்கு சுகம் அறக்கட்டளை தலைவர் டாக்டர் காளிமுத்து தலைமை வகித்தார்.  முகாமில் மகளிர் வர்ம வைத்திய நிபுணர் டாக்டர் தேவி ராஜலெட்சுமி, ஆண்கள் வர்ம வைத்திய நிபுணர் வைத்தியர் ராகவேந்திரன், பரம்பரை வர்ம கலை நிபுணர் மைக்கேல்பாபு ஆகியோர் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனி தனியாக மூட்டுவலி, குதிகால் வலி, தோள்பட்டை வலி, முதுகு தண்டுவட வலி, கழுத்து வலி, தீராத ஒற்றை தலைவலி போன்ற பலவிதமான வலிகளுக்கு சிறப்பு வர்ம சிகிச்சை வழங்கினர். நுாற்றுக்கும் மேற்பட்டோர் வர்ம சிகிச்சை பெற்றுச் சென்றனர். இது தவிர சிறப்பு சித்த மருத்துவர் டாக்டர் திருநாவுக்கரசு, பொது வர்ம மருத்துவர் வைத்திய செல்வமூர்த்தி ஆகியோரும்  சிகிச்சை வழங்கி ஆரோக்கியமான வாழ்விற்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கினர்.  இயற்கை முறையிலான சிகிச்சை என்பதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோர் பங்கேற்று சிகிச்சை பெற்று சென்றனர். மேலும் மருத்துவ ஆலோசனைகளும் முகாமில் வழங்கப்பட்டது. முகாமில் அமிழ்தம்  நிறுவனம் சார்பில் இயற்கை முறையிலான மருந்துகள் மற்றும் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.
டாக்டர் காளிமுத்து பேசும் போது, இன்றைய சூழலில் கண்டிப்பாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒன்றை மட்டும் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது, ஆரோக்கியமான உடல்நிலையை பராமரிக்க உணவே மருந்து, மருந்தே உணவு என்ற ரீதியில் இயற்கையான உணவுகளை பயன்படுத்த வேண்டும். மருந்துகள் பயன் படுத்து வதிலும் இயற்கையான மூலிகைகள் உடல் நலத்திற்கு நல் விளைவுகளை ஏற்படுத்தும். பக்க விளைவுகள் இருக்காது, என்றார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here