திருவள்ளூர், பிப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூரில் உள்ள ஊத்துக்கோட்டை சாலையில் ஓய்வு பெற்ற காவலர்களுக்கான நலச் சங்கம் தற்காலிகமாக இயங்கி வந்தது. இந்நிலையில் சங்கத்திற்கு நிரந்தர இடம் இல்லாததால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல்துறை உயர் அலுவலர்களை சந்தித்து, நிரந்தர இடம் கேட்டு கோரிக்கை மனு அளிக்கப்பட்ட நிலையில், திருவள்ளுவரை சேர்ந்த தொழில்பர் கிஷன்லால் தாமாக முன்வந்து தனக்கு சொந்தமான புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சுமார் ரூ. 40 லட்சம் மதிப்பிலான இடத்தை அன்பளிப்பாக அளித்துள்ளார்.
அதனை அடுத்து திருவள்ளூர் மாவட்ட ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்கம் சார்பில் புதியக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், அதனை இன்று முன்னாள் காவல்துறை இயக்குனர் சேகர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
மேலும் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற அந்நிகழ்ச்சியில், காவல்துறை இயக்குனர் காந்திராஜன், தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவலர் நல சங்க கூட்டமைப்பின் தலைவர் வேலுச்சாமி, முன்னாள் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கஜேந்திரகுமார், முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் வரதராஜன் உள்ளிட்ட சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஓய்வு பெற்ற காவலர் நல சங்கத்தின் 150 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட திரளானவர்கள் அவ்விழாவில் பங்கேற்று விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்த்தனர்.