திருத்துறைப்பூண்டி, மே. 09 –
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பாண்டியில், இன்று திருத்துறைப்பூண்டியில் இருந்து தொண்டியகாடு வரை செல்லும் அரசு நகர பேருந்து விபத்தில் சிக்கி அப்குதியில் உள்ள வாய்க்காலில் கவிழ்ந்தது. அப்போது அப்பேருந்தில் இருந்த முப்பதிற்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.
இன்று திருத்துறை பூண்டியில் இருந்து தொண்டியக்காடு வரை செல்லும் அரசு நகரப்பேரூந்து திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பியது, மேலும் அப்பேருந்தை ஓட்டுனர் சிவபாலன் ஓட்டி வந்தார். அப்போது பாண்டி வளைவு அருகே பேருந்து வந்த போது, அப்பேருந்துக்கு எதிரே வேகமாக இருசக்கர வாகனம் ஒன்று வந்ததாக கூறப்படுகின்றது, அப்போது அப்பேருந்தின் ஓட்டுநர் சிவபாலன் இருசக்கர வாகனத்தில் மோதுவதை தவிர்க்க பேருந்தை திருப்பிய போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அப்பேருந்து சாலையோரத்தில் இருந்த வாய்க்காலில் பாய்ந்து கவிழ்ந்த்துள்ளது.
மேலும் பேருந்து கவிழ்ந்த சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்து பேருந்துக்குள் இருந்த 30க்கும் மேற்பட்ட பயணிகளை மீட்டு, அங்கிருந்து உடனடியாக எடையூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு 108 மற்றும் டிஎன்டிஜே ஆம்புலன்ஸ் மூலம் பயணிகளை திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் அவ்விபத்தில் அப்பேருந்தில் பயணம் செய்த நான்கு பேர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் எடையூர் காவல்நிலைய காவல்துறையினர் இவ்விபத்துக்குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

























