இராமநாதபுரம் , திருபுல்லாணி , நயினார் கோவில் , பரமக்குடி , கடலாடி , கமுதி , மற்றும் முதுகுளத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 45 ஊராக குடியிருப்பு பகுதிகளுக்கு டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கிட ரூ . 60 இலட்சம் நிதி ஒதுக்கப் பட்டு உடனடி நடவடிக்கை மூலம் குடிநீர் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வழங்கப் படுகிறது என அமைச்சர் மணிகண்டன் செய்தியாளர் கள் சந்திப்பில் கூறினார் .

 இராமநாதபுரம் ; ஜூன் , 

 இராமநாதபுரம் மாவட்டம் திருபுல்லாணி  ஊராட்சி  ஒன்றியம் , தில்லையேந்தல் ஊராட்சிக் குட்பட்ட பள்ளமோர் குளம் கிராமத்தில் இன்று தமிழ்நாடு குடி நீர் வாரியம் சார்பாக தகவல் தொழிற் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் எம் . மணிகண்டன்  வறட்சியான சூழ்நிலையால் பொதுமக்கள் பாதிக்கப் படாதவகையில் டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கும் பணிகளை துவக்கி வைத்தார் .அதன் பின் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில்

அமைச்சர் கூறியதாவது ;

தமிழ்நாட்டில் தற்போது நிலவி வரும் வறட்சியான சூழ்நிலையால் பொதுமக்கள் பாதிக்கப் படாத வகையில் பாதுகாத்திடும் வகையில் போர்கால அடிப்படையில் பர்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற் கொண்டு வருகிறது . அந்த வகையில் குடிநீர் வழங்கிட முடியாத குடியிருப்புப் பகுதிகளுக்கு டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள் .

இராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது நாளொன்றுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் காவிரி கூட்டு நீர்திட்டத்தின் கீழ் சராசரியாக 35 எம்.எல்.டிஅளவிலும் , ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் ஊரக குடி நீர் திட்டத்தின் கீழ் 6 . 5 எம். எல்.டி அளவிலும் , உள்ளூர் குடிநீர் ஆதாரங்கள் மூலமாக 40 எம் .எல் .டி அளவிலும் என 81.5 எம் .எல் .டி அளவிலான மக்கள் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யப் பட்டு வருகிறது.

மேலும் தமிழக முதலமைச்சர் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் குடிநீர் வினியோகம் செய்ய இயலாத கிராமப் பகுதிகளுக்கு டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கிட ஏதுவாக ரூ . 60 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது . குறிப்பாக இராமநாதபுரம் , திருபுல்லாணி , நயினார் கோயில் , பரமக்குடி , கடலாடி ,கமுதி ,மற்றும் முதுகுளத்தூர் ஆகிய ஊராட்சிஒன்றியங்களை சேர்ந்த 45 ஊரக குடியிருப்புப் பகுதிகளுக்கு டேங்கர் லாரிகள் மூலம் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வீதம் குடிநீர் வினியோகம் மேற் கொள்ளப் பட்டுள்ளது என தெரிவித்தார் .

இந் நிகழ்வின் போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற் பொறியாளர் எம் . அயினான் , உதவி செயற் பொறியாளர்கள் திருச்சி சண்முக நாதன் , டி .எம் . ஜவகர்கென்னடி, உதவி பொறியாளர்கள் முத்து கிருஷ்ணன் , சுவடு பாலசுப்பிரமணியன் உட்பட அரசு அலுவலர்கள் கிராம பொது மக்கள் கலந்துக் கொண்டனர் .

 இராமநாதபுரம் மாவட்டம் திருபுல்லாணி  ஊராட்சி  ஒன்றியம் , தில்லையேந்தல் ஊராட்சிக் குட்பட்ட பள்ளமோர் குளம் கிராமத்தில் இன்று தமிழ்நாடு குடி நீர் வாரியம் சார்பாக தகவல் தொழிற் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் எம் . மணிகண்டன்  வறட்சியான சூழ்நிலையால் பொதுமக்கள் பாதிக்கப் படாதவகையில் டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கும் பணிகளை துவக்கி வைத்தார் .உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ . வீர ராகவ ராவ் உள்ளார் .

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here