திருவண்ணாமலை, ஆக.19-
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ராயன்குப்பம் கிராமத்தில் விவசாயி வேலு என்பவரின் சொந்த விவசாய கிணற்றில் அவரது பசுமாடு தவறி விழுந்தது.
இதையடுத்து போளூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்த்தின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சௌந்தர்ராஜன் தலைமையிலான குழுவினர், சுமார் 300 சதுர அடி அகலமும், 40 அடி ஆழமும் கொண்ட கிணற்றில் கன்று ஈனும் நிலையில் இருந்த பசுமாட்டினை மீட்டனர்.
இந்த மீட்பு பணியில் தீயணைப்போர் தேசிங்கு கன்னியப்பன், தீயணைப்பு ஓட்டி பாஸ்கரன், தீயணைப்பு வீரர்கள் பிரகாஷ், ராகுல், பாலசுந்தர் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் பசு மாட்டினை மீட்டு மாட்டின் உரிமையாளர் இடம் ஒப்படைத்தனர். இதற்கு அந்த பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.