காஞ்சிபுரம், செப். 29 –

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அடுத்துள்ள தேவரியம்பாக்கம் ஊராட்சியில் ஜீவானந்தம் என்பவர் கேஸ் குடோன் ஏஜென்சிஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில்   தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படும் 990 லிட்டர் அளவு கொண்ட பெரிய சிலிண்டர் ஒன்று வாகனத்தில் இருந்து இறக்க முயற்சித்தபோது தவறி கீழே விழுந்து வால்வு  உடைந்து ஏற்பட்ட கேஸ் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து விரைவாக அருகாமையில் இருந்த மற்ற சிலிண்டர்கள் மீதும் தீ பரவியது.  இவ்விபத்தில் 12 பேர் காயமடைந்து செங்கல்பட்டு மற்றும் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த பெரும் தீவிபத்தில் வாயில்லா ஜீவன்களான நாய் மற்றும் 2 பூனைகள் பலத்த காயமுற்று முடிகள் கொட்டியபடி பயந்த நிலையில் குடோனின் ஓரம் பதுங்கி இருந்தன.

இன்று காலை அதனைக் கண்ட தீயணைப்பு துறையினர்  கால்நடை பராமரிப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் 12 மணிக்கு வந்த கால்நடை பராமரிப்பு துறையினர் 3 கால்நடைகளையும் மீட்டு சிகிச்சை அளித்து பின்பு தங்கள் வாகனத்திலேயே  எடுத்து சென்றனர்

3 விலங்குகளுக்கு கால்நடை பராமரிப்பு துறையினர் சிகிச்சை அளிக்கும் போது, விலங்குகள் கதறிய சம்பவம் காண்போர் நெஞ்சத்தை பதபதைக்கச் செய்தது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here