கும்பகோணம், ஜூலை. 26 –

கடந்தாண்டு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்குரிய, ரூபாய் ஆயிரத்தி 200 கோடி இழப்பீட்டு தொகையை இதுவரை வழங்காததை கண்டித்தும், நடப்பாண்டிற்குரிய பயிர்காப்பீடு குறித்து இதுவரை அறிவிப்பு வெளியிடாததை கண்டித்தும், கடந்த 3 ஆண்டுகளாக தாமதமாக வழங்கிய இழப்பீடுகளுக்கான வட்டித்தொகையை வழங்காததை கண்டித்தும், விவசாயிகள் சட்டையில் கருப்பு பேஜ் அணிந்து, கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்று தங்களது எதிர்பினை நூதன முறையில் பதிவு செய்ததனர் இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. மேலும் இதைக் கூட்டத்தில் காட்டுப்பன்றி தொல்லைகளை கட்டுப்படுத்திட இந்திய கம்யூ கட்சியினர் சார்பில் கோட்டாட்சியரிடம் முறையீடு செய்தனர்.

கும்பகோணம் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட கும்பகோணம், பாபநாசம் மற்றும் திருவிடைமருதூர் வட்டங்களுக்குட்பட்ட பகுதி விவசாயிகளுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள மகாமக அரங்கில் கோட்டாட்சியர் லதா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வட்டாட்சியர்கள் கும்பகோணம் தங்க பிரபாகரன், திருவிடைமருதூர் சந்தானவேல், பாபநாசம் மதுசூதனன் ஆகியோர் உட்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் கடந்தாண்டு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்குரிய, ரூபாய் ஆயிரத்தி 200 கோடி இழப்பீட்டு தொகையை இதுவரை வழங்காததை கண்டித்தும், நடப்பாண்டிற்குரிய பயிர்காப்பீடு குறித்து இதுவரை அறிவிப்பு வெளியிடாததை கண்டித்தும், கடந்த 3 ஆண்டுகளாக தாமதமாக வழங்கிய இழப்பீடுகளுக்கான வட்டித்தொகையை வழங்காததை கண்டித்தும், விவசாயிகள் சட்டையில் கருப்பு சின்னம் அணிந்து வந்து தங்களது எதிர்ப்பினை நூதன முறையில் பதிவு செய்து, கோரிக்கையை கோட்டாட்சியரிடம் முன்வைத்தனர்.

தொடர்ந்து இந்திய கம்யூ கட்சி சார்பில், பாபநாசம் வட்டம் அம்மாபேட்டை யூனியனுக்குட்பட்ட, மெலட்டூர், விழுதியூர், சடையன்கால் கிராமங்களில் காட்டுப்பன்றி தொல்லைகள் அதிக அளவில் உள்ளது இதனால் விளை நிலங்களில் பெரிய அளவில் இழப்பை ஏற்படுத்துவதால் அதனை தடுத்து நிறுத்திட வேண்டும் என பேனருடன் கூட்டத்திற்கு வந்து கோரிக்கை மனு அளித்தனர்.

மேலும், இக்கூட்டத்தில் பேசிய விவசாயிகள் பலரும், மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில் அதிகமான நீர் கொள்ளிடம் ஆற்றில் திரும்பி விடப்பட்டதால், காவிரியாற்றில், அதிக அளவில் நீர் போதுமான அளவிற்கு தொடர்ந்து விடாததால் பல இடங்களில் இன்னமும், ஏ பிரிவு பி பிரிவு மற்றும் சி பிரிவு வாய்க்கால்களுக்கு தண்ணீர் வரவில்லை என குற்றம்சாட்டினர்.

நீர்ரொழுங்கியை சீர்மைக்காமல் பொதுப்பணித்துறையினர் அலட்சியமாக 3 ஆண்டுகாலமாக காலதாமதம் செய்து வருவதால், சாக்கோட்டை அருகேயுள்ள மலையப்பநல்லூர், சிவபுரம், அண்டக்குடையான் ஆகிய கிராமங்களில் உள்ள 500க்கும் மேற்பட்ட ஏக்கர் சாகுபடி வசதி பெரும் நிலங்களில் சுமார் நூறு ஏக்கரில் சாகுபடி செய்திருந்த, நெல், பருத்தி, எள், பயிறு வகைகள் நீரில் முழ்கி அழுகும் நிலை ஏற்பட்டது குறித்து விவசாயிகள் எடுத்துரைத்தனர்.

இக்கூட்டத்திற்கு, அறநிலையத்துறை சார்பில் உயரதிகாரிகள் யாரும் வராததற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது அடுத்து கூட்டத்திற்கு அவர்கள் வரவில்லை என்றால், கூட்டம் ஒத்தி வைக்கப்பட வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தினர்.

பேட்டி : சுவாமிமலை சுந்தரவிமல்நாதன், செயலாளர், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here