தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தேனி மாவட்டத்தில் உள்ள வைகை  அணையை தூர்வார பட்ஜெட் நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப் பாட்டம் நடைப் பெற்றது. தேனி மாவட்டத்தில் உள்ள வைகை  அணை ஆற்றில் சுமார் 20 அடிக்கு வண்டல் மணல் மணல் மேடாகி உள்ளதால் 70 அடி கொள்ளளவு கொண்ட அணையில் தண்ணீர் தேங்குவது 50 அடியாக குறைந்து வரும் சூழல் உள்ளது அணையை தூர்வார்வதற்கான பல தொழில் நுட்ப கம்பெனிகள் வந்து பார்வையிட்டு தூர்வார செலவாகும் பட்ஜெட் உள்பட பொதுப்பணித் துறை உயர் அதிகாரிகள் விவாதித்து பின்னும், இது வரை எந்த வேலையும் நடக்காமல் உள்ளதால் தற்போது மத்திய மாநில அரசுகளின் பட்ஜெட் மானியக் கோரிக்கை களின் விவாதங்களை சட்ட மன்றத்திலும் நாடாளு மன்றத்திலும் நடந்து வரும் இந்த தருணத்தில் ஐந்து மாவட்ட விவசாயிகளின் நீர் ஆதாரமான வைகை அணையை தூர்வாரி முழு கொள்ளளவு மழை நீரை தேக்கினால் மட்டுமே  விவசாய பயன்பாடு குடிநீர் பயன்பாட்டுக்கு உதவும் என்றும் ஆகவே உடனடியாக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி அரசு தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த தூர்வாரும் வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கவும் அணையில் 100 அடி வரை மணல் உள்ளதாக ஆய்வு செய்துள்ளதால் இந்த மணல் கட்டுமான தேவைக்கு பயன்படுத்தி தூர்வாரும் செலவு முழுவதும் அரசு வருவாய் வரும் என்பதும் அரசின் கவனத்திற்கு தொழில்நுட்ப வல்லுனர்கள் கூறுகின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலத்திற்கு முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடந்த  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் எஸ் கண்ணன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் செய்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் மனுவை பெற்று மாவட்ட ஆட்சியர் வைகை அணை தூர் வாருவது சம்பந்தமாக விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here