காஞ்சிபுரம், ஆக. 07 –

பொருளியியல் மற்றும் புள்ளியியல் துறை ஆணையர்  தலைமையில் பிச்சிவாக்கம் கிராமத்தில் பொதுப் பயிர் மதிப்பீட்டாய்வுத் திட்டத்தின் கீழ் நெல் பயிர் அறுவடை பரிசோதனை நடைபெற்றது.

காஞ்சிபுரம் அருகே ஆண்டுதோறும் சில முக்கிய உணவு மற்றும் உணவல்லாத பயிர்களுக்கான பயிர் அறுவடை பரிசோதனைகள் ஏதேச்சை எண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயிர் அறுவடை களத்தில் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் பயிர் மகசூல் விவரங்கள் துல்லியமாக கணக்கீடு செய்யப்படுகிறது.

இவ்வாறு பெறப்படும் பயிர் உற்பத்தி அளவீடுகள் மாநில அளவில் தொகுக்கப்பட்டு, அரசிற்கு அனுப்பி வைக்கப்படும்.  இந்நிகழ்வினை  பொருளியியல் மற்றும் புள்ளியியல் துறை மூலம் தயார் செய்யப்படும் பருவ கால பயிர் அறிக்கை விவரங்கள் மத்திய அரசின் உணவு கொள்கை வகுப்பதற்கும், வேளாண்மை துறை சார்ந்த திட்டங்களை வகுப்பதற்கும், பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் பொதுப் பயிர் மதிப்பீட்டாய்வுத் திட்டத்தின் கீழ் நெல், காஞ்சிபுரம் அருகே அறுவடை பரிசோதனை,  காஞ்சீபுரம் மாவட்டம், திருபெரும்புதூர் வட்டம்,  காஞ்சிபுரம் அருகே  பிச்சிவாக்கம் கிராமத்தில் சென்னை பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை ஆணையர் பிங்கி ஜோவல், தலைமையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அங்கிருந்த விவசாயிகளிடம்  ஆணையர் கலந்துரையாடினார்.

அப்போது அவரிடம் காரிப் பருவத்திற்கு நெல் கொள்முதல் செய்வதற்காக, நேரடி கொள்முதல் விற்பனை நிலையத்தினை ஆகஸ்ட் மாதத்திலேயே அமைத்துத்தர ஆவண செய்யுமாறு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.  மேலும், உழவன் உற்பத்தி நிறுவனத்தின் இயக்குனரிடம்,  விவசாயிகளின் நலனுக்காக அரசு வகுக்கும் அனைத்து திட்டங்களையும் வெற்றிகரமாக செயல்படுத்த அனைத்து துறை அலுவலர்களையும் ஒருங்கிணைந்து செயல்படுமாறு ஆணையர் கேட்டுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து  ஆணையர்,  அடங்கல் தரவுகளின் தற்போதைய நிலையினை காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலிருந்து வந்த கிராம நிர்வாக அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

11வது வேளாண்மை கணக்கெடுப்பிற்கு அடங்கல் தான் அடிப்படை என்றும் இக்கணக்கெடுப்பு முதன்முறையாக இணையதள செயலி அல்லது கைபேசி செயலி மூலம் செயல்படுத்தப் படவுள்ளதன் முக்கியவத்துவத்தை உணர்த்தி இ அடங்கல் தரவுகளை உடன் மேற்கொள்ளுமாறு கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மண்டலப் புள்ளியியல் இணை இயக்குநர் ஜெயகாந்தி,  மாவட்டப் புள்ளியியல் துணை இயக்குநர் சுந்தரராஜ்,  மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் ஆதிசாமி,  கோட்டப் புள்ளியியல் உதவி இயக்குநர் ஆறுமுகம்,  மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here