பொன்னேரி, ஜூலை. 17 –
பழவேற்காடு அரசு பள்ளியில் கடந்த 90 – 91 ஆம் ஆண்டில் கல்விப் பயின்ற மாணவர்களின் நேர் முக சந்திப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதல் ஒருவருக்கொருவர் தங்களின் பசுமையான பழைய நினைவுகளை அப்போது பகிர்ந்துக் கொண்டு உளம் மகிழ்ந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுக்கா, பழவேற்காடு பகுதியில் அமைந்துள்ள ஜெகந்தாம்பாள் சுப்ரமணியம் அரசு மேல்நிலைப்பள்ளியில், கடந்த 1990-91 ஆம் ஆண்டு கல்விப் பயின்ற மாணவ மாணவிகளின் நேர்முக சந்திப்பு நிகழ்ச்சி அப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் மாணவர்களான சென்னை புதுக்கல்லூரி முதல்வர் அப்துல் ஜபார், தங்கராஜ், விஜயம்,, விஜய கோபால், கோபாலகிருஷ்ணன் ராஜா, ராமன், உள்ளிட்ட முன்னாள் மாணவ மாணவிகள் தங்கள் குடும்பத்தாருடன் வந்து இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில், முன்னாள் மாணவர்கள் தங்களது மேல்படிப்பு மற்றும் தற்போது வரை உள்ள பல்வேறு அனுபவங்கள் குறித்து ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டும் நினைவுப் பரிசுகளை பகிர்ந்துக் கொண்டும் உளம் மகிழ்ந்தனர்.
அப் பசுமையான நினைவுகளுக்கிடையே தொடர்ந்து இதுப்போன்ற சந்திப்பு நிகழ்ச்சி இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் மூன்றாம் வாரம் நடத்துவதெனவும் மேலும், முன்னாள் மாணவர்களின் குழு ஒன்றை அமைப்பதெனவும் முடிவெடுத்து அதுக் குறித்து அவர்களுக்கிடையே ஒத்தக் கருத்து ஏற்பட்டு அதனை தீர்மானமாக நிறைவேற்றினார்கள்.
தொடர்ந்து அப்பள்ளி வளாகத்தில் உள்ள அம்மண்ணிற்கேற்ற மரக் கன்றுகளை நட்டி வைத்தனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அனைத்தையும் பழவை ரமேஷ், சக்திவேல், பாளையம், விஜய் அமிர்தராஜ், உள்ளிட்டோர் வெகுச்சிறப்பாக செய்து அந்நிகழ்வினை வழி நடத்தினார்கள்.