மீஞ்சூர், டிச. 22 –

திருவள்ளூர் மாவட்டம்,  மீஞ்சூர் ஒன்றியம், மீஞ்சூரில்  இந்திய கிறிஸ்துவ வாலிபர் சங்கத்தின் சார்பில் இன்று சமத்துவ கிறிஸ்துமஸ் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது,

மேலும் இவ்விழாவிற்கு, கிறிஸ்துவ வாலிப சங்கத்தின் தலைவர் அச்சங்கத்தின் நிர்வாகிகள் ஜெ.குருசாலமோன் தலைமை வகிக்க, ஜேம்ஸ், டேவிட் அர்ஜுனன், தனசேகரன், ஈஸ்டர்ராஜ், அருள்தாமஸ், எம்.தாமஸ் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்,

சங்க செயலாளர் ஆபிரகாம் பாலாஜி, ஒருங்கிணைப்பாளர் பெஞ்சமின், பேராயர் விமல்ராஜ், உள்ளிட்டவர்கள் அந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றனர்.

இந் நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளர்களாக பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், மீஞ்சூர் திமுக நகர செயலாளர் தமிழ்உதயன், பேரூராட்சித் துணைத் தலைவர் அலெக்சாண்டர், உள்ளிட்டவர்கள் வருகை தந்து விழாவினைத் துவக்கி வைத்து புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கும், துப்புரவு பணியாளர்களுக்கும், நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

மேலும் கிறிஸ்துமஸ் விழாவை சிறப்பிக்கும் வகையில் அனைவருக்கும் சமத்துவ கேக் வெட்டி கொண்டாடி, வந்திருந்த அனைவருக்கும் அருசுவை உணவளித்தனர். இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, துணைத் தலைவர் சுபாஷ், துணைச் செயலாளர் ஆண்ட்ரூஸ், ஜான் இமானுவேல், உள்ளிட்டவர்கள் இந்நிகழ்விற்கு வந்திருந்து விழாவினை மேலும் சிறப்பான வகையில் அமைவதற்காக உறுதுணைப் புரிந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து உரை நிகழ்த்தினார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here