செங்கல்பட்டு, ஜூலை. 12 –
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் தென் மண்டல குழாய் பிரிவு, செங்கல்பட்டு மாவட்ட அலுவலகம் சார்பில் அம்மாவட்டம் முழுவதும் சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அப்பகுதி மக்களுக்கும், மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு தேவையான கல்வி உபகரணங்களை வழங்கி வருகிறது.
மேலும் சுற்றுப்புற தூய்மைக் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில், நடை மற்றும் மிதிவண்டி பேரணி பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அதுப்போன்று தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் கடற்கரை பகுதிகளில் உள்ள குப்பைக்கூழங்கலை அந்நிறுவன ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்கள் சார்பில் தூய்மைப்படுத்தியும் மக்களிடையே விழிப்புணர்வுகளை தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றனர்.
மேலும் பிளாஸ்டிக் பயன்பாட்டால் சுற்றுப்புற சூழல் மாசுபடுவதை கட்டுப்படுத்த பொதுமக்கள் மேற் கொள்ள வேண்டிய கடமைகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களும், அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் வீட்டு பொருட்களை வாங்குவதற்கான ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணிப்பைகள் மற்றும் மரக்கன்றுகள் ஆகியவற்றை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் பாரதப்பிரமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இருவார தூய்மை அனுசரிப்பு எனும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை கடந்த ஜூலை 1 ஆம் தேதியன்று துவங்கி எதிர்வரும் 15 ஆம் தேதிவரை அந் நிறுவனம் பல்வேறு நிகழ்ச்சிகளை ஒவ்வொரு நாளும் அம்மாவட்டத்தில் நடத்தி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக இன்று ( ஜூலை 12 ) வேடந்தாங்கல் பகுதியில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள மாணவ மாணவியர்களுக்கான தூய்மை இந்தியா என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நடைப்பெற்றது. இதில் 700 க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் பங்கேற்றனர். இப்பேச்சுப் போட்டியில் வெற்றிப்பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தினார்கள்.
மேலும் இந்நிகழ்வின் நிறைவில் 1300 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை மாணாக்கர்களுக்கு வழங்கினார்கள். இந்நிகழ்வின் நிறைவில், பங்கேற்ற அனைவரும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழியேற்றனர்.