திருவள்ளூர், ஏப். 25 –

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்துள்ள அத்திப்பட்டு பகுதியில் அமைந்துள்ளது வட சென்னை அனல் மின் நிலையம் அதன் நுழைவுவாயிலின் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசு மற்றும் மினசாரவாரியத்திடமும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஐ.என்.டி.யூ.சி மாநில துணைப் பொது செயலாளர் எம்.பி. தாமோதரன் தலைமை வகித்தார். இன்ஜினியரிங் அமைப்பு உற்பத்தி செயலாளர் மகேஸ்வரன். இன்ஜினியரிங் சங்கம் பாலகிருஷ்ணன் . அம்பேத்கர் யூனியன் தலைவர் ரமேஷ், சிஐடியு செயலாளர் சுந்தரம் அண்ணா தொழிற்சங்கம் பூபாலன், சிஐடியு தலைவர் ஜெயவேல், ஐஎன்டியூசி மாநில துணைத் தலைவர் ரவி செல்வம் உள்ளிட்டவர்கள்  முன்னிலை வகித்தனர்.

இதில் அனைத்து தொழிலாளர்களின் சங்க பொறுப்பாளர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி சிறப்புரையாற்றினார்கள். அவர்கள் பேசுகையில் சரண்டர் தொகை, கல்வி கடன்கள் உட்பட அனைத்து சலுகைகளையும் வழங்க மறுக்கும் திட்டத்தை புறக்கணிக்க வலியுறுத்தியும், ஊதிய உயர்வை உடனடியாக அமல்படுத்த வேண்டியும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். புதிய பதவிகளை அனுமதிக்காமல், ஓய்வு பெற்றவர்களை மறுபணி அமர்த்தும் முறையை புகுத்த எதிர்ப்பு தெரிவித்தும், வேலைப்பளு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பிரிவுகளுக்கு மின் இணைப்பு எண்ணிக்கையின் அடிப்படையில் வட்டங்கள் மற்றும் மண்டலங்களை உருவாக்குவது தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் பேசி தீர்வு காணவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

12 4 2022 அன்று பிறப்பித்துள்ள வாரிய ஆணை எண் 2 உத்தரவை உடனே ரத்து செய்ய வலியுறுத்தியும், 1. 12 2019 முதல் மின்வாரிய கணியாளர்கள், அலுவலர்கள், பொறியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வை உடனடியாக வழங்கிட வேண்டும். என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி கண்டனக் குரல் எழுப்பினார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here