சென்னை, பிப். 16 –

நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைப்பெற, மாதிரி நடத்தை விதி அமுலில் உள்ளதை, தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் பறக்கும் படையினரால் தீவிரமாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதனடிப்படையில் தமிழகத்தில் கடந்த ஜன 29 முதல் பிப் 10 – 2022 வரை பணம் மற்றும் பொருள்கள் பறக்கும் படையினரால் இதுவரை ரூ. 9,28,37,192 மதிப்பில் கைப்பற்றப் பட்டுள்ளது.

இதில் பணமாக கடந்த ஜன 29 – 2022 ல் 40, 40,831 ம், ஜன 30 முதல் பிப் 4 வரை ரூ.3,53,91,443 ம், பிப் 5 முதல் பிப் 10 – 2022 வரை ரூ. 2, 95, 31,504 ம் ஆக மொத்தம் ரூ. 6,89,63,778 ரொக்கப்பணம் தேர்தல் பறக்கு படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதுப் போன்று ஜன 29 அன்று ரூ. 12,57,080 மதிப்பிலான 15 லேப்டாப்கள், 40 மொபைல் போன்கள், 140 பித்தளை குத்து விளக்குகள் உள்ளிட்ட பொருள்களும், ரூ. 74,090 மதிப்பிலான மதுப்பாட்டில்களும் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், ஜன 30 முதல் பிப் 4 வரை ரூ. 1,20,89,390 மதிப்பிலான 39 மடிக்கணினிகள், காலனிகள்,துண்டுகள், சில்க் மற்றும் சிந்தடிக் புடவைகள் உள்ளிட்ட பொருள்களும், ரூ.15,94,965 மதிப்பிலான மதுப்பாட்டில்களும் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பிப் 5 முதல் பிப் 10 வரையில் ரூ. 3,72,650 மதிப்பிலான புடவைகள் துண்டுகள் மற்றும் கோல்டு கவரிங் பொருள்களும், ரூ. 84,85,239 மதிப்பிலான மதுப்பாட்டில்களும் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஆக மொத்தமாக கடந்த ஜன 29 முதல் நடப்பு மாதம் பிப் 10 வரையில் ரூ. 9,28,37,192 மதிப்பிலான பணம் மற்றும் பொருள்கள் மதுப்பாட்டில்கள் என தேர்தல் பறக்கும் படையினரால் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்றவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here