பெரியபாளையம், ஏப். 5-

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன் …

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே ராள்ளபாடி கிராமத்தில் அமைந்துள்ளது தனியார் மேல்நிலைப்பள்ளி இந்நிலையில் அப்பள்ளி மாணவர்கள் எதிர்வரும் 19-ம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்துடன் இணைந்து 18-வது மக்களவை பொதுத் தேர்தலில் வாக்களர்கள் நூறு சதவிகித வாக்குப்பதிவு செய்வதின் அவசியம் குறித்து உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியும், மேலும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேரணியும், துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

அந்நிகழ்ச்சிகளுக்கு, தனியார்  மேல்நிலைப் பள்ளியின் நிறுவனரும், தாளாளாருமான டாக்டர் இ.ஏகாம்பரம் தலைமை தாங்கினார். அனைவரையும் பள்ளியின் முதல்வர் ஜெ.இ.ரஞ்சித்குமார் வரவேற்றார். ஊத்துக்கோட்டை தனி வட்டாட்சியர் வெண்ணிலா, பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் (பயிற்சி) ஆஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் இ.மதன் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வி.கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டு நமது இலக்கு 100 சதவிகித வாக்குப்பதிவு உறுதி மொழியை வாசித்தனர்.

தொடர்ந்து பெரியபாளையம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அருகே இருந்து மாணவர்களின் தேர்தல் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்.  இந்நிகழ்ச்சியில், பெரியபாளையம் வருவாய் ஆய்வாளர் கீதா, ராள்ளபாடி கிராம நிர்வாக அதிகாரி சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.முடிவில், பள்ளியின் இயக்குனர் பி.எபினேசர் நன்றிவுரை நிகழ்த்தினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here