ராமநாதபுரம், ஜூலை 5-

மாணவிகள் தங்களது மாணவ பருவத்தில் தங்களுக்கான திறனை வளர்த்துக்கொண்டால் தொழில்முனைவராக உருவாகி பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் அளவில் பெண் முன்னேற்றம் அடைய பேஷன் டெக்னாலஜி பயிற்சி முகாம் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது, என தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் சுமையா பேசினார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெண்களுக்காகவே பெண்கள் கல்வியில் புரட்சி செய்ய வேண்டும் என்ற உயர்நோக்கில் அந்தைய காலத்தில் கீழக்கரையில் தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லுாரி துவங்கப்பட்டது. இக்கல்லுாரியின் முக்கிய நோக்கம் பின்தங்கிய ராமநாதபுரம் மாவட்டத்தில் பெண்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும், அதற்கு அவர்களுக்கு கல்வி மிகவும் முக்கியம் என்பதால் ராமநாதபுரம் மாவட்ட மகளிர்களுக்கு குறைந்த செலவில் உயர்ந்த தரமான கல்வியை கற்றுத்தந்து வருகின்றனர். தாசிம்பீவி கல்லுாரியில் பயின்று இன்று பல மாணவிகள் வெளிநாடுகளிலும், நம்நாட்டிலும் உயர்ந்தநிலையில் உள்ளனர் என்றால் அதற்கு முழு காரணம் தாசிம்பீவி அப்துல்காதர் பெண்கள் கல்லுாரிதான். அந்த வகையில் தற்போது காலத்திற்கு ஏற்ப கல்வியில் புரட்சியை ஏற்படுத்துவதிலும் அவர்கள் சளைத்தவர்கள் அல்ல என்ற சிந்தனையில் பெண்களுக்கு போட்டி உலகில் எப்படி சமாளிப்பது, புதிய கல்விகளை கொண்டு வந்து எப்படி கற்றுத்தருவது என்பதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். தற்போது தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லுாரியில் ஹோம் சயின்ஸ் மற்றும் பேஷன் டெக்னாலஜி கோர்ஸ் உருவாக்கப்பட்டு உலக தரத்தில் மாணவிகளுக்கு கல்வியை கற்றுத்தருகின்றனர்.

அதன் ஒரு கட்டமாக தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கலை கல்லுாரியில் கடந்த நான்கு நாட்களாக பேஷன் டெக்னாலஜி பயிற்சி பட்டறை வகுப்பு நடந்தது. இந்த பயிற்சியை இந்தியா, இலங்கை இன்ஸ்டியூட் இயக்குனர் பிரபலமான நதீன் மற்றும் அவரது குழுவினர் கல்லுாரியில் கடந்த ஒரு வாரமாக முகாமிட்டு மாணவிகளுக்கு நாம் அன்றாட பயன்படுத்தும் துணிகளை வேஷ்டாக துாக்கி எறிவதை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என அதாவது, அழகான துணி பை, பர்ஸ். ஸ்கிரீன் போன்ற பலவகைகளில் கற்றுத்தந்தனர்.
பயிற்சி பட்டறை நிறைவு விழாவில் ஹோம்சயின்ஸ் மற்றும் ஆராய்ச்சி துறை உதவி பேராசிரியர் லட்சுமி வரவேற்றார்.
விழாவில் கல்லுாரி முதல்வர் சுமையா தலைமை வகித்து பேசுகையில், பெண்கள் எளிதில் எதையும் கற்றுக்கொள்வார்கள். அதனால் அவர்களால் தொழில் முனைவராக வர பல வாய்ப்புகள் உள்ளன. அதிலும் மாணவ பருவத்தில் மாணவிகள் தங்கள் தனி திறனை வளர்த்துக்கொண்டால் எதிர்காலத்தில் பெரிய தொழில் முனைவராக வந்து பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நிலைக்கு உருவாகுவீர்கள். இந்த நான்கு நாள் பயிற்சியில் மாணவிகளின் தனி திறனை பார்த்து நானே அசந்துவிட்டேன். ஒவ்வொரு மாணவிகளிடமும் இவ்வளவு திறமை இருந்தும் அதை வெளிபடுத்த அவர்களுக்கு வாய்ப்பு அமையவில்லையே என்று. ஆனால் தற்போது நடந்த பயிற்சி பட்டறை ஒவ்வொரு மாணவிகளுக்கும் தைரியத்தை கொடுத்து என்னால் முடியும் நான் சாதிப்பேன் என்ற உயர்ந்த லட்சியத்தை உருவாக்கியுள்ளது நினைக்கும் போது எனக்கு பெருமையாக உள்ளது. சென்னை, பெங்களூர் போன்ற பகுதிகளில் தண்ணீர் பிரச்னை வந்துவிட்டது. அதை உணர்ந்து நாம் குழந்தைகளுக்கு தண்ணீர் தேவையின் அளவை சொல்லித்தரவேண்டும். உணவு வேஷ்ட் செய்வதை தவிர்க்க வேண்டும். தற்போது நடந்த பயிற்சி பட்டறை மிகவும் பயனுள்ளதாக இருந்த காரணத்தால் இனி மாதம் இரண்டு நாள் இந்த பயிற்சி பட்டறை நடத்தி மாணவிகளை ஊக்குவித்து ஒவ்வொரு மாணவிகளும் சாதனையாளர்களே என்பதை வெளிப்படுத்துவோம், என்றார்.

இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி பாத்திமா பேசும்போது, சத்தியமாக எனக்கெல்லாம் ஒன்றுமே தெரியாது என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் இந்த பயிற்சி பட்டறையில் பங்கேற்ற பின் என்னாலும் முடியும் என்ற தைரியம் என்னுள் வந்துவிட்டது. குறிப்பாக தன்னம்பிக்கை எனக்கு கிடைத்துள்ளது. நாம் சாதிக்க வேண்டும் என்ற வேகத்தைத் தூண்டி விட்டனர். இதற்கு கல்லுாரி முதல்வருக்குதான் நாங்கள் நன்றி சொல்ல வேண்டும், என்றார்., மாணவி ரவி சுலைஹா நன்றி கூறினார்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here