சென்னை, அக். 30 –

நேற்று தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் ஊழல் தடுப்பு இயக்குநரக அதிகாரிகள் மற்றும் ஆய்வு பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதில், ரூ. 18,20,030 இலட்சம் ரொக்கம், டாஸ்மாக் ஐஎம்எஃப்எல் ரூ. 6,47,180/-, மதிப்பிலான மதுப்பாட்டில்கள் ரூ. 36,000 மதிப்பிலான 36 பட்டாசு பெட்டிகள் மற்றும் சில ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.

நேற்று 29.10.2021 விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகம் அதிகாரிகள் மற்றும் ஆய்வு பிரிவு அதிகாரிகள் மாநிலம் முழுவதும் உள்ள 33 அரசு அலுவலகங்களில் 14 துறைகள் (TNEB, போக்குவரத்து, பதிவு, தீயணைப்பு மற்றும் மீட்பு, வணிகவரி,காவல்துறை, நிலசீர்திருத்தம்,தாலூகா வழங்கல் அலுவலகம், டாஸ்மாக், ஊரக வளர்ச்சி, மருந்து கட்டுப்பாடு, தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், நகராட்சி, ( டிடிசிபி ) ஆகிய இடங்களில் நடத்திய திடீர் சோதனையில், கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்தனர். அதில் ரொக்கம் ரூ. 18,20,030/-, டாஸ்மாக் ஐஎம்எஃப்எல் ரூ. 6,47,180/-, மதிப்பிலான பாட்டில்கள் ரூ. 36,000 மதிப்பிலான 36 பட்டாசு பெட்டிகள் மற்றும் சில ஆவணங்களை பறிமுதல் செய்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here