கும்பகோணம், பிப். 03 –

கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியில், நேற்று இரவு முதல் மழையுடன் காற்று வீசீயதால் வயல்களில் வெள்ளம் நீர் சூழ்ந்து, அதில் பயிரிடப்பட்ட  500 க்கும் மேற்பட்ட ஏக்கர் சம்பா நெல் பயிர்கள் சாய்ந்து பாதிப்பு அடைந்த்துள்ளது. அதனால் அப்பகுதி விவசாயிகள் பெருத்த கவலையில் உள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த வடகிழக்கு பருவ மழையால்  விவசாயிகள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வந்த நிலையில் அதிலும் குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்ததால் வீடுகள், கரும்புகள், நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இந்த நிலையில், திருப்பனந்தாள் ஒன்றியத்தில் உள்ள பந்தநல்லூர்  அருகே காவனூர், கண்ணாரக்குடி, திருப்பனந்தாள், மணிக்குடி, நரிக்குடி, முட்டக்குடி,  பருத்திக்குடி உள்ளிட்ட கிராமத்தில் நேற்று இரவு முதல் கனமழையுடன் பெருத்த காற்று வீசீயதால் வயல்களில் வெள்ளம் நீர் சூழ்ந்து  அவ்வயல்களில் பயிரிடப்பட்ட  500 க்கும் மேற்பட்ட ஏக்கர் சம்பா நெல் பயிர்கள் சாய்ந்து பாதிப்பு அடைந்தது.

மேலும் இம்மழையின் காரணமாக உயிர்ச் சேதங்கள் இல்லை என்பது ஆறுதல் தந்தாலும், விவசாய பயிர் சேதம் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர். மேலும், சம்பா பயிர்கள் தற்போதைய பருவம் தவறிய தொடர் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டு சேதமடைந்துள்ளது. எனவும், மேலும், முறையான வடிகால் கட்டமைப்பு இல்லாத நிலையிலும், மேலும் நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு காரணமாகவும் இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,

மேலும், மழைநீர் வடிந்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப குறைந்தது ஒரு வாரம் ஆகலாம். எனவும் அப்போது அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

மேலும் மழை தொடரும் நிலையில், நீரில் மூழ்கியுள்ளன பயிர்கள் அழுகி அது பாழாகும் ஆபத்தும் உள்ளது என அப்போது அவர்கள் பெருத்த கவலையுடன் தெரிவித்தனர்.

மேலும், சம்பா நெல் பயிரிடப்பட்டு அது, நன்கு வளர்ந்த நிலையில், இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் இதனால் ஏக்கருக்கு பல ஆயிரம் செலவு செய்த விவசாயிகள் நஷ்டம் அடைந்து வருவதாகவும் அவர்கள் அப்போது கவலையுடன் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், இப்பாதிப்புகள் குறித்து கண்டறிய வருவாய் துறை மற்றும் வேளாண்மை துறை இணைந்த முழுமையான கணக்கெடுப்பு பணிகளை போர்கால அடிப்படையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளை ஒருங்கிணைத்து  உடனடியாக அரசு தொடங்க வேண்டும் எனவும்,

மேலும், 33 சதவீதத்திற்கு மேல் பயிர் சேத பாதிப்புகள் மட்டுமே கணக்கெடுக்கப்படும் என்கின்ற தற்போதைய உச்சவரம்பை நீக்கி ஏக்கருக்கு ரூ.30,000/- நிவாரணம் வழங்க வேண்டும் என்று காவிரி பாசன குத்தகை மாவட்ட விவசாய சங்க தலைவர் அமிர்த.கண்ணன் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here