காஞ்சிபுரம், செப். 05 –

காஞ்சிபுரம் மாவட்டம் பழையசீவரம் பகுதியில் பாலாறு, செய்யாறு மற்றும் வேகவதி ஆறு என மூன்று ஆறுகள் சங்கமிக்கும் பகுதிதான் திருமுக்கூடல் என பெயர் வந்தது. இந்த திருமுக்கூடல் பகுதியில் கடந்த பத்து மாதங்களுக்கு மேலாக தண்ணீர் வற்றாமல் உள்ளது.

கடந்த 2021 ஆண்டு நவம்பர் மாதம் நாறு ஆண்டுகள் இல்லாத மழை பெய்த போது, திருமுக்கூடல் பகுதியில் ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் கன அடி நீர் வெழியேற்றப்பட்டது. அந்த நவம்பர் மாதத்தில் இருந்து தற்போது வரை நீர் வற்றாமல் உள்ளது. பழையசீவரம் – திருமுக்கூடல் பகுதியில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையால் சுற்றியுள்ள 15 கிராம விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பழையசீவரம் பகுதியில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையால் பிலாப்பூர், திருமுக்கூடல், பழையசீவரம், அருங்குன்றம், பழவேலி, என 15 கிராம மக்களுக்கு இந்த தடுப்பணை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. வழக்கமாக ஒரு போகம் விவசாயத்திற்கே தண்ணீர்க்கு பஞ்சமாக இருக்கும் இப்பகுதியில் தற்போது தடுப்பணை முழுவதும் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருவதால் மூன்று போகமும் விவசாயம் செய்து வருவதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

குறிப்பாக இதனால் சென்னை தாம்பரம், பல்லாவரம் பகுதிக்ளுக்கு குடிநீர் முக்கிய ஆதாரமாக இந்த பழையசீவரம் ஆறு இருந்து வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் தண்ணீர்க்கு தட்டுபாடு ஏற்படும். ஆனால் தற்போது, கட்டியுள்ள தடுப்பணையால் தாம்பரம், பல்லாவரம் பகுதி தண்ணீர்க்கு பஞ்சமில்லாமல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த ஒரு வாரமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த மழையால் பாலாறு, செய்யாறு, வேகவதி ஆற்றில் தண்ணீர் ஒடையாக வருவதால் திருமுக்கூடல் பகுதிக்கு தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்து கடல் போல் காட்சியளிக்கின்றது.

மேலும், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் திருமுக்கூடல், பழையசீவரம் சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் தடுப்பணையில் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்து வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here