தஞ்சாவூர், மே. 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு…
தமிழகம் முழுவதும் கடுமையான வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் அணைகள், ஆறுகள், ஏரிகள், குளங்கள் முற்றிலும் வறண்டு போய் உள்ளன. இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். ஆனால் திருச்சனவளந்தைப் பகுதியில் உள்ள ஊராட்சி மன்ற நிர்வாகிகளின் அலட்சிய போக்கினால் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் இருந்து குடிநீர் தொடர்ந்து வீணாகி வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே திருச்சடவளந்தை உள்ள 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்தேக்க தொட்டியில் தண்ணீர் நிரம்பி வழிகிறது. தொட்டி நிரம்பிய பிறகும் மோட்டாரை ஊழியர்கள் நிறுத்தாததால் பல மணி நேரம் பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது. தண்ணீரின் அருமை அருமை தெரியாத ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.