காஞ்சிபுரம், ஏப். 07 –
காஞ்சிபுரம் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் செல்வம் காய்கறி சந்தையில் காய்கறி விற்பனை விற்பனை செய்து பிரச்சாரம் மேற்கொண்டார் முன்னதாக அவருக்கு அக்கட்சியின் தொண்டர்கள் இரண்டு ஜேசிபி எந்திரம் மூலமாக பூக்களை தூவி வரவேற்று உற்சாகப் படுத்தினார்கள்.
சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதியில் தற்போதைய எம் பி யும், மூன்றாவது முறையாக போட்டியிடும் திமுக வேட்பாளர் செல்வம் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் அமைந்துள்ள ராஜாஜி சந்தையில் சுட்டெரிக்கும் வெயிலில் சென்று திமுக வேட்பாளர் செல்வம் காய்கறி விற்பனை செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மேலும் அப்போது அவர்களிடம் குறைகளையும் கேட்டறிந்து இந்த ஆண்டு இறுதிக்குள் ஏழு கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் காய்கறி சந்தை மாற்றப்படும் எனத் தெரிவித்த அவர் திமுகவின் சின்னமான உதயசூரியனுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
அவருடன் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
அதேப் போன்று மிலிட்டரி ரோடு பகுதியில் அவர் வாக்கு சேகரிக்க சென்ற போது அக்கட்சியின் தொண்டர்கள் இரண்டு ஜேசிபி இயந்திரம் மூலமாக பூக்களை தூவியவாறு பிரம்மாண்ட மாலை அணிவித்து வேட்பாளர் செல்வத்தை உற்சாகத்துடன் வரவேற்பளித்தனர்.