திருநின்றவூர், மே. 09 –
ஆவடி அருகேவுள்ள திருநின்றவூரில் நேற்று ,6 வயதிற்கு மேற்பட்ட பள்ளி, மாணவ மாணவிகளுக்கு மாவட்ட அளவில் நடைப்பெற்ற இரண்டாம் ஆண்டு கராத்தே போட்டி, இதில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்துள்ள திருநின்றவூர் ஜெயா கல்லூரி விளையாட்டு திடலில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது.
இப்போட்டிக்கு சிறப்பு அழைப்பாளராக பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கோப்பைகளும் சான்றிதழும் வழங்கினார்.
இப்போட்டியில் 6 வயதுக்கு மேற்பட்ட ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், செவ்வாபேட்டை, வெங்கம்பாக்கம், கசுவா, மோரை, வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை போன்ற பகுதிகளில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் 100 க்கும் மேற்பட்டோர்கள் இப்போட்டியில் பங்குப்பெற்றனர்.
இம்மாணவர்கள் திறமையான பயிற்சியாளர்களிடம் இக்கலையை பயின்று தங்களது திறனை வெளிப்படுத்தினார்கள். தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சர் சா.மு. நாசர் மற்றும் ஜெயா கல்வி அறக்கட்டளை நிறுவனர் கனகராஜ் கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட துணைச்செயலாளர் ரமேஷ், நகர சேர்மன் திருமதி உஷா ராணி ரவி, துணை சேர்மன் திருமதி சரளா நாகராஜ், நிமிலிச்சேரி தலைவி செல்வி தமிழ்செல்வி, திருநின்றவூர் திமுக நகர செயலாளர் தீவை ரவி, நகர கவுன்சிலர்கள் அன்பழகன், மற்றும் நாகராஜ், தொழில்நுட்ப இயக்குனர் விஜயராகவன் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி துணை செயலாளர் தியாகராஜன் மற்றும் சந்தோஷ் குமார் கராத்தே பயிற்சியாளர்கள் ரமேஷ் மற்றும் ராஜா, மாணவ மாணவிகளின் பெற்றோர்களும் பயிற்சி ஆசிரியர்களும் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை தொழில்நுட்ப இயக்குனர் விஜயராகவன் துணை இயக்குனர் தக்ஷிணாமூர்த்தி, தலைவர் ராஜா துணைச் செயலாளர்கள் ரமேஷ்குமார், தியாகராஜன் மற்றும் சந்தோஷ்குமார் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.