திருவண்ணாமலை செப்.26-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா நோய் நோய் தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொழுது போக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள், அணைகள் ஆகியன பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அன்று (26ந்தேதி) வரை ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை அக்டோபர் 3ந்தேதிவரை தொடர்ந்து நீட்டித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மாவட்ட ஆட்சியர் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மாவட்ட நிர்வாகத்தின் இத்தகைய முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று முற்றிலும் இல்லை என்ற நிலையினை அடைய உதவிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.