செங்கல்பட்டு, மார்ச். 19 –

மனதைத் திருடி விட்டாய் படத்தில் மஞ்சக்காட்டு மைனா,  சச்சின் படத்தில் வாடி வாடி வாடி கை படாத சிடி, ஜனா படத்தில் பொதுவா பலருக்கு பத்து மாசம் அய்யா, தொட்டுபுட்டா எட்டு மாசம், திண்டுக்கல் சாரதி படத்தில் திண்டுகல்லு திண்டுகல்லு போன்ற பிரபல பாடல்களை எழுதிய திரைப்படப் பாடலாசிரியர் வீ.இளங்கோ ரூபாய் 15 கோடி சந்தை மதிப்புள்ள நிலங்களை அபகரிக்க போலி ஆவணங்கள் தயாரித்து,  பதிவு செய்து, பாடலாசிரியரின் மாமியாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, சென்னை வழக்குரைஞர் ஓ.வி. கிருஷ்ணன் மற்றும் அவரது சகோதரிகள்,  சகோதரர் மகன்கள் மீது செங்கல்பட்டு மாவட்ட  நில அபகரிப்பு பிரிவு போலீசில் புகார் கொடுத்திருந்தார்.

அப்புகார் மனுவில், கிழக்கு கடற்கரை சாலை, கூவத்தூரை அடுத்த வடபட்டினம் கிராமத்தில் வெங்கடவரத ரெட்டியார் என்பவர் கடந்த சில ஆணடுகளுக்கு முன்பு உயில் மூலம் அவரது தங்கையான மங்கம்மாளுக்கு 15-கோடி மதிப்பிலான நிலத்தை எழுதி வைத்துள்ளார். இந்த இடத்திற்கு 20 ஆண்டுகளுக்கு மேல் மங்கம்மாள் அரசு வரியைக் கட்டி வருகிறார். இந்நிலையில் மங்கம்மாளின் அனுபவத்தில் உள்ள நிலங்களையும், வெங்கடவரத ரெட்டியாரின் மகன்கள் மற்றும் மகள்கள் மங்கம்மாளின் நிலங்களை நில பறிப்பில் ஈடுபடும் நோக்குடன், 2003-ல் ஒரு போலி ஆவணமும். 2012-ல் மற்றொரு போலி ஆவணமும் தயாரித்து, அவைகளை செய்யூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர்.

இது மட்டுமின்றி, ரூபாய் ஒரு கோடி கேட்டு, 80 வயதான  மங்கம்மாள் அவர்களுக்கு கூட்டாக கொலை மிரட்டல் விட்டதாகவும். தான் வக்கீல் என்று சொல்லிக் கொண்டு நில பறிப்பில் ஈடுபடுவதையே ஓ.வி.கிருஷ்ணன் முழு நேர வேலையாக கொண்டிருப்பதாகவும், செங்கற்பட்டு நில அபகரிப்பு பிரிவு போலீசாரிடம் மங்கம்மாளின்  மருமகனான திரைப்பட பாடலாசிரியர் வி.இளங்கோ கொடுத்த புகாரில் தெரிவித்துள்ளார். அப்புகாரின் பேரில் மாவட்ட போலிஸ் சூப்பிரண்டு அரவிந்தன்  நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். அதன் படி நில அபகரிப்பு குற்றத்தில் ஈடுப்பட்டதாக

1 வழக்கறிஞர் ஓ.வி. கிருஷ்ணன். இவரது சகோதரிகள் மதுராந்தகம் தாலுக்கா, கூடலூரைச் சேர்ந்த 2 விஜயகுமாரி, 3 ராஜேஸ்வரி, மதுராந்தகம் தாலுக்கா கழனிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 4 ரேணுகாம்பாள்,  உத்திரமேரூர் தாலுக்கா,  அருங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்களான மதுராந்தகம் தாலுக்கா 5 லஷ்மிகாந்தம்.  கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த 6 கிருஷ்ணகுமார். செங்கற்பட்டு அழகேசன் நகரைச் சேர்ந்த 7 மனோகரன் ஆகியோர் மீது ஏமாற்றுதல்,  போலி ஆவணங்கள் தயாரித்து,  அவைகளை அரசு ஊழியர் முன் சமர்பித்து பதிவு செய்தல், கொலை மிரட்டல், கூட்டு சதி போன்ற குற்றங்களுக்காக  8 பிரிவுகளில் செங்கல்பட்டு மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here