மயிலாடுதுறை,மே. 12 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…

தருமபுரம் ஆதீனத்தில் புகழ்பெற்ற பட்டின பிரவேசம் விழா, ஆலயத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் சுவாமி கோவிலில் கொடியேற்றத்துடன் 19 ஆம் தேதி துவங்குகிறது.

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தருமபுர ஆதீன மடம் அமைந்துள்ளது. மடத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஞானாம்பிகை உடனுறை ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் சுவாமி ஆலயம் அமைந்துள்ளது.

ஆலயத்தில் பத்து நாட்கள் நடைபெறும் வைகாசி பெருவிழாவில் பட்டினப்பிரவேசம் எனப்படும் ஆதின கர்த்தரை பல்லக்கில் சுமந்து வீதி உலா வரும் முக்கிய நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதனை முன்னிட்டு அதற்கான கொடியேற்று விழா தருமபுரம் ஞானபுரீஸ்வரர் ஆலயத்தில் மே இருபதாம் தேதி காலை நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 6 ஆம் தேதி சுவாமி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி. பஞ்சமூர்த்திகள் திருத்தேர் உற்சவம் காவிரியில் தீர்த்தவாரி ஆகியவை பத்து நாள் உற்சவத்தில் நடைபெறுகிறது.

மேலும் ஆதீன மடத்தில் தருமபுர ஆதீன குருமுதல்வர் ஸ்ரீ ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் குருபூஜை பெருவிழா 10 நாள் உற்சவமாக நடைபெறுகிறது.

அதனை முன்னிட்டு திருநெறிய தெய்வத்தமிழ் மாநாடு நடைபெற உள்ளது. பல்வேறு தமிழ் சைவம் சார்ந்த கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. விழா நிறைவாக  30ஆம் தேதி ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பல்லக்கில் வீதி உலா வரும் பட்டினப்பிரவேசம் காட்சியும் நடைபெறுகிறது.

கடந்த 2022ம் ஆண்டு பட்டினப்பிரவேச நிகழ்ச்சியின் போது மனிதனை மனிதன் சுமப்பதா என திராவிட இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தமிழக அரசு தடை செய்து தொடர்ந்து பக்தர்கள் எதிர்ப்பை அடுத்து மீண்டும் அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கதாகும்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here