தஞ்சாவூர், மே. 20 –

தம்பட்டம் செய்திகளுக்காக சாரு…

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று அகில இந்திய முத்தரையர் கூட்டமைப்பு, தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் அகில இந்திய முத்தரையர் கூட்டமைப்பு தலைவர் மூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில், பேராவூரணி தில்லங்காடு முத்தரையர் சமூக மக்களுக்கும் தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கும் இடையே மோதலை ஏற்படுத்தி புனையப்பட்ட பொய் புகாரை திரும்ப பெறவும்,  அதற்கு துணை போகும் அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தியும் அவர்கள் முழக்கங்களை எழுப்பி  ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மேலும் அவ்வார்ப்பாட்டத்தில் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் நிறுவன தலைவர் புதுக்கோட்டை கருப்பு முத்தரையர், தமிழக முத்தரையர் முன்னேற்ற சங்கம் மாநில செயலாளர் மோகன், முத்தரையர் வாழ்வாதார இயக்கம் தலைவர் தனலட்சுமி  உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here