புதுச்சேரி, பிப். 27 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…

ஜல்லி, எம் சாண்ட், பி சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை மூன்று மடங்கு உயர்ந்திருப்பதைக் கண்டித்து புதுச்சேரியில் அகில இந்திய கட்டுநர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கட்டுமானப் பொருட்களின் விலை அடிக்கடி உயர்த்தப்பட்டு வருவதால் வீடு கட்டுமானம் மற்றும் புதிய வீடு வாங்குதல் பணிகளை மேற்கொண்டுள்ள மக்களுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவும் அதனால் கட்டுமான தொழில் வளர்ச்சிப் பாதிப்படைந்து வருகிறதெனவும் மேலும் அத்தொழிலை நம்பியிருக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகி உள்ளதெனவும் அக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் உரை நிகழ்த்தியவர்கள் தெரிவித்தனர்.

மேலும் ஜல்லி வகைகள், எம் சாண்ட், பி சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் 60 சதவீதம் விலை ஏற்றத்தை கண்டித்தும், கட்டுமான பொருட்கள் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த உடனடியாக ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டுமென்பதை வலியுறுத்தியும் புதுச்சேரியில் அகில இந்திய கட்டுநர் சங்கத்தினர் புதுச்சேரி சுதேசி மில் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் தங்களது கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தியும், புதுச்சேரி அரசுக்கு எதிராகவும் உரத்த முழக்கங்களை எழுப்பினர். மேலும் அக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here