ராமநாதபுரம், ஜூலை 6-
ராமநாதபுரத்தில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஜார்கண்ட் மாநிலத்தில் வாலிபர் தப்ரேஸ் அன்சாரி படுகொலை செய்யப்பட்ட செயலை கண்டித்து மாபொரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஜார்கண்ட் மாநிலத்தில் வாலிபர்  தப்ரேஸ் அன்சாரி ஜூன் 25ல் படுகொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில் ராமநாதபுரம் சந்தை திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஏ.முஹமது அயூப்கான் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் பா.அப்துர் ரஹ்மான் கண்டன உரையாற்றினார்.

அவர் கூறியதாவது: ஜார்கண்ட் மாநிலம் செரை கெலா என்னும் இடத்தில் தப்ரேஸ் அன்சாரி (24 ) கொடூமாக தாக்கப்பட்டார். போலீசில் ஒப்படைக்கப்பட்ட தப்ரேஸ் அன்சாரி அங்கும் தாக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தாக்குதலுக்கு உள்ளான தப்ரேஸ் அன்சாரி 5 நாட்களுக்கு பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தியாவில் சிறுபான்மையினர் மீதான தொடர் தாக்குதல் தடுத்து நிறுத்த வேண்டும்.  மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டில் மதத்தின் பெயரால் தொடரும் இது போன்ற தாக்குதல் கள் ஏற்றுக்கொள்ளக் கூடியவை அல்ல. இது போன்ற தாக்குதல்கள் இனி நடப்பதை மத்திய அரசு உடனே தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றார். மாவட்ட செயலாளர் ஆரிப் கான், மாவட்ட பொருளாளர் ரஹ்மான், மாவட்ட துணைத் தலைவர் பசீர், மாவட்ட துணை செயலர்கள் தினாஜ் கான், இபுராஹீம், சித்திக் மற்றும் பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here