தஞ்சாவூர், ஏப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
பூதலூர் பகுதியில் உள்ள நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான மேம் பாலத்தில் விளக்குகள் எரியாததால் விபத்துக்கள் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக அப்பகுதி வாழ் பொதுமக்கள் தங்கள் அச்சத்தை தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் நகர பகுதியில் அமைந்துள்ளது. மேலும் நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான ரயில்வே பாலம் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் மக்கள் பயன்பாட்டில் உள்ளது.
இந்த பாலத்தின் வழியாக எளிதாக கல்லணை, திருச்சி செல்வதற்கு பயன்படுகிறது. இருப்பினும் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த பாலத்தின் இருபுறமும் ஒளிரக் கூடிய 38 சாலை விளக்குகள் எரியாததால் பாலத்தில் திருட்டு சம்பவங்கள், சமூக விரோத செயல்கள் மற்றும் இரவு நேரங்களில் மாடுகள் படுத்துயிருப்பதால் விபத்துகளும் நடைப்பெறுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இரவு நேரங்களில் தொடர்ந்து விளக்குகள் எரியாததால் எதிர் வரும் காலங்களில் பெரும் உயிர் சேதம் ஏற்படும் விபத்துகளை தடுத்திட நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.
மேலும் சட்டமன்ற உறுப்பினர் ,அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் சிறப்பு முகாமில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் உடனடியாக விளக்குகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் .
பொதுமக்களின் நலன் கருதியும், விபத்துக்கள் தடுக்கும் வகையிலும் சாலையில் உள்ள மின் விளக்குகள் செயல்பட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என அப்பகுதி வாழ் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.