கும்பகோணம், டிச. 26 –
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பாபநாசம் தாலுகா பசுபதிகோவில் எல்லையில் இருந்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த 25 ஆம் தேதியன்று என் மண் என் மக்கள் நடைப்பயணம் மேற்கொண்டார்.
அந்த யாத்திரையின் போது, அண்ணாமலை மக்களை சந்தித்து அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து தஞ்சாவூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் பசுபதிகோவில் முதல் அய்யம்பேட்டை வரை நடந்தே சென்று பொதுமக்களை சந்தித்த அவர், தொடர்ந்து அய்யம்பேட்டையில் பாஜக பிரச்சார வாகனத்தில் நின்று மக்களிடையே சிறப்புரையாற்றினார். அப்போது இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழக அமைச்சர்கள் 11 பேர் மீது ஊழல் மீது மட்டும்தான் நிலுவையில் உள்ளது என பேசினார்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு பாஜக தலைவரோடு மாவட்ட செயற்குழு உறுப்பினர் வாசுதேவன், அய்யம்பேட்டை நகர செயலாளர் முரளி, மாவட்ட வட்டார நிர்வாகிகளும், உறுப்பினர்களும் நடை பயணத்தில் திரளாக கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து அய்யம்பேட்டை , சக்கராப்பள்ளி, வழுத்தூர், பண்டாரவடை, ராஜகிரி ,சரபோஜி ராஜபுரம், ரகுநாதபுரம், பண்டாரவாடை, ராஜகிரி பாபநாசம் வழியாக அப்பாதை யாத்திரை சென்றது.