கும்மிடிபூண்டி, செப். 10 –
திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவுறுத்தலின்படி பிரதிமாதம் இரண்டாம்சனிக்கிழமையன்று, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் செய்து கொள்வதற்காக சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் பொருட்டு இன்று இம்மாதத்திற்கான சிறப்பு முகாம் கும்மிடிப்பூண்டி அடுத்த பனப்பாக்கம் கிராமத்தில் உள்ள நியாய விலை கட்டிடத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சீனன் ஏற்பாட்டில் வட்ட வழங்கல் அலுவலர் ஜூலியட் விமலா தலைமையில் இம்முகாம் நடைபெற்றது.
இதில் உரிய ஆவணங்களை வழங்கி இவ்வூராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது குடும்ப அட்டையில் உள்ள குறைபாடுகளை சரி செய்து கொண்டனர்.




















