திருவள்ளூர், ஆக 6 –
முதலமைச்சர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் படி கடந்த 1 ஆம் தேதி முதல் கொரோனா விழிப்புணர்வு தொடர் வாரம் நிகழ்ச்சியை ஆவடி மாநகராட்சி, மாநராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு விதமான நிகழ்ச்சிகளின் வடிவில் கொரோனா 3 ஆம் அலை தடுப்பு மற்றும் விழிப்புணர்வு, தடுப்பூசி போட்டுக் கொள்வதின் அவசியம் போன்ற விழிப்புணர்வையும், அறிவுறுத்தலையும் பொது மக்களிடையே செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று ஆவடி மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் அவர்களின் வழி காட்டுதலின் படி பட்டாபிராமில் அமைந்துள்ள இந்துக் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துக் கொண்டு ஆவடி அடுத்த பட்டாபிராம் தண்டுரை பஜார் பகுதியில் கொரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வு தெருக்கூத்து நிகழ்ச்சி நடத்தினர்.
இந்த தெருக்கூத்து நிகழ்ச்சிகளை ஆவடி மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் மற்றும் கூடுதல் பொறுப்பாளர் அப்துல் ஜாபர் நகர் நல அலுவலர் சுகாதார அலுவலர் அசின் ஆகியோர் முன்னின்று நடத்தினர்.