திருவண்ணாமலை மாவட்டத்தில் 01.08.2021 முதல் 07.08.2021 வரை
கொரோனா விழிப்புணர்வு 4வது நாள் தொடர் பிரச்சாரம் நிகழ்ச்சி ஆவின் குளிருட்டும் நிலைய வளாகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது .

திருவண்ணாமலை, ஆக 5 –

திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சி ஒன்றியம், ஆவின் குளிருட்டும் நிலைய வளாகத்தில் நேற்று (04.08.2021) கொரோனா விழிப்புணர்வு 4வது நாள் நிகழ்ச்சியாக திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் சார்பில் குளிருட்டும் நிலைய அலுவலர்கள் மற்றும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு தடுப்பூசி முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்ச்சியில் ஆவின் பொது மேலாளர் ராஜ்குமார், ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர் பெ. சந்திரா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருட்செல்வம், வட்டார மருத்துவ அலுவலர் மரு. புவனேஸ்வரி, துணை ஆட்சியர் (பயிற்சி) செல்வி. அஜித்தா பேகம், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்க பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் கலந்துக் கொண்டனர்.

மாவட்ட ஆட்சியர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளவதின் அவசியம் குறித்தும், முககவசம் அணிவதன் அவசியம் குறித்தும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.

இதனை தொடர்ந்து ஈசான்ய மைதனாம் அருகில், பாரத சாரண இயக்கம், தேசிய மாணவர்படை, ஜீனியர் ரெட்கிராஸ், தேசிய நாட்டு நலப் பணி திட்டம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர், பின்னர் சாலையில் செல்பவர்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முககவசம் வழங்கபட்டது.

மேலும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஈசான்ய மைதனாம் அருகில், நடந்து செல்லும் பொதுமக்கள், மிதிவண்டி, மற்றும் இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் செல்லும் பொதுமக்களிடம் அரசின் கொரோனா வழிகாட்டு நடைமுறைகள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல்  கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள அனைவரும் கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுரை வழங்கினார். மேலும் திருச்சி செல்லும் பேருந்தில் ஏறி அரசின் கொரோனா வழிகாட்டு நடைமுறைகள் கடைபிடிக்கபடுகிறதா என ஆய்வு செய்து, பின்னர் முககவசம் அணியாத பயணிகளுக்கு முககவசம் வழங்கி அறிவுறை கூறினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here