சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள ஈஞ்சம்பாக்கம் குப்பம் பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் இன்று இந்திய திரு நாட்டின் 75 வது ஆண்டு சுதந்திர தினவிழாவை கொண்டாடும் விதத்தில் புதிதாக கொடி மரத்தை நட்டு தேசியக் கொடியை ஏற்றி கொண்டாடத் திட்டமிட்டு செயல்பட்டனர். அப்போது அதைத் தடுக்கும் வகையில் போலீசார் அப் பகுதியில் கொடிக் கம்பத்தை நடவும் கொடியேற்றவும் தடை விதித்து அப் பகுதியில் தடுப்பு அரணை அமைத்தனர். பின்பு அவர்களிடம் இருந்து கொடிக் கம்பத்தையும் கொடியையும் பறிக்க முயன்ற போது போலீசாருக்கும், அப் பகுதி குப்பத்து மக்களுக்குமிடையே வாக்கு வாதம் முற்றிப்போய் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அந்தக் கலவரச் சூழலில் கொடிக் கம்பத்தில் கட்டப் பட்டிருந்த தேசியக் கொடி போலீசாரின் முரட்டுத்தனமான நடவடிக்கையால் கிழிந்து கந்தலானதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சென்னை, ஆக. 15 –

75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் குப்பம் பகுதி மக்களுக்காக 1984ம் ஆண்டு அரசு சார்பில் பட்டா கொடுத்துள்ளனர். பின்னர் 1995-1996ம் ஆண்டு பட்டாவை அரசு திரும்ப பெற்றுள்ளது .

இந் நிலையில் ஈஞ்சம்பாக்கம் குப்பம் சாலையில் உள்ள பிரச்சனைக்கு உள்ளான அப்பகுதியில் அதாவது 98 சென்ட் காலி இடத்தில் கொடியேற்றுவதற்காக குப்பத்து மக்கள் முயற்சித்த போது போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு. ஏற்பட்டு சாலையில் தடுப்புகளை அமைத்து பொதுமக்களை தடுத்து நிறுத்தி தேசிய கொடியை ஏற்றுவதற்கு அனுமதி மறுத்ததால் கொடி கம்பத்துடன் போராடிய மக்களிடமிருந்து கொடி கம்பத்தை போலீசார் பறிக்க முயன்ற போது இரு தரப்பினர்க்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.  தள்ளு முள்ளு ஏற்பட்ட போது தேசிய கொடி கிழிந்ததால் போலீசார் கொடியை பொது மக்களிடமிருந்து பிடுங்கி மறைத்து எடுத்து சென்றனர்.

போலீசார் தேசிய கொடியை கிழித்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டி கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்ட பெண்கள் சிலர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து குப்பத்து மக்கள் பிரச்சனையில் ஈடுபட்டதால் போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு தேசிய கொடியை ஏற்ற போலீசாரே கம்பத்தை நட்டு தேசிய கொடியை ஏற்ற பாதுகாப்பாக இருந்து மூவர்ணக் கொடியை ஏற்றினர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். அந்த பகுதியில் எந்த ஒரு அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here