திருவாரூர், மார்ச். 16 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் கே. நாகராஜ்

திருவாரூர் மாவட்டம், மூர்த்தி, தலம், தீர்த்தம் இவற்றில் முதன்மையானதாகவும்.. சைவ சமயத்தில் தலைமை பீடமாகவும், பிறக்க முக்தி தரும் மூலாதார தலமாகவும் விளங்குவது திருவாரூர்.

பஞ்ச பூத தலங்களில் மண்ணுக்கு உரிய தலமாக விளங்கும் திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது..

கடந்த 25. 02. 2024 முதல் வருகின்ற 02. 04. 2024 வரை நடைபெறுகின்ற திருவிழாவின் முக்கிய நிகழ்வான ‘ஆழி’ தேரோட்டம் வருகிற 21. 03. 2024 அன்று நடைபெற உள்ளது.

பன்னிரு திருமுறைகளால் பாடல் பெற்ற இந்த திருக்கோயிலில் வேறு எங்கும் இல்லாத வகையில் தேருக்கு என்று பாடல் பெற்ற  ஒரே தலமாக விளங்கி வருகின்ற “ஆழித்தேர் “ஆசியாவிலேயே பெரிய தேராகும்.

கடந்த 25. 02. 2024 அன்று விநாயகர் வழிபாடுடன் தொடங்கி காப்பு கட்டுதல்,  பூத நெல் கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்று.. 27. 02. 2024 அன்று ஆலயத்தில் ரிஷப கொடி ஏற்றப்பட்டது.

தொடர்ந்து நடைபெறும் பங்குனி உத்திர பெருவிழா நிகழ்வில் வருகின்ற 21. 03. 2024 அன்று ஆழித்தேர் வடம் பிடிக்க உள்ளது. அதனை முன்னிட்டு, விநாயகர் தேர், சுப்பிரமணிய தேர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் தேர்கள் கட்டுமானம் மும்முரமாக நடைபெற்று வருகிறது..

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here