பொன்னேரி, டிச. 08 –

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள ஆவூர் ஊராட்சிக்குட்பட்ட சின்ன ஆவூர், பெரிய ஆவூர், பங்காரமேடு பகுதியில் புயல் மழையால் வீடுகளில் மழை வெள்ளம் புகுந்து கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் திட்ட தலைவரும், திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர்.கே.ஜெயக்குமார் ஆணைப்படி, திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் துரை சந்திரசேகர் ஆலோசனையின் பேரில், அவ்வூராட்சியை சேர்ந்த திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சி.பரசுராமன் அக்கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு வீடு வீடாக சென்று அரிசி, காய்கறிகள், பால் போர்வைகள் உள்ளிட அத்தியாச பொருட்களை வழங்கினர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here