பட்டுக்கோட்டை, பிப். 25 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம் இரண்டாம்புளிக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் அஞ்சாதே இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் சுத்தம் கிராமத்தார்கள் இணைந்து நடத்தப்படும் 10-ஆம் ஆண்டு மாபெரும் மாட்டுவண்டி, குதிரைவண்டி எல்கை பந்தயம் நேற்று நடத்துவதற்கு நீதிமன்றத்தில் மனு செய்து அனுமதி வாங்கப்பட்ட நிலையில், அந்நிகழ்வினை சிங்கவனம் ஜமின் தலைமையில் மாநில, மாவட்ட மாட்டுவண்டி, குதிரைவண்டி சங்கத்தலைவர்கள், துணை தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் மாட்டுவண்டி உரிமையாளர்கள், சாரதி, துணை சாரதி என அனைவரும் நேற்று காலை நடத்திட இருந்த போது, சம்பவ இடத்திற்கு வந்த சேதுபாவாசத்திரம் போலீசார் இந்த போட்டி நடத்துவதற்கு அனுமதிக்க முடியாது என்று போட்டியை நிறுத்த சொல்லி உள்ளனர். அதற்கு விழா குழுவினர் காரணம் கேட்ட பொழுது   முறையாக காவல் துறையில் தகவல் தெரிவிக்க வில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இப்பிரச்சினைக் குறித்து அவ்விழா கமிட்டியினர் தெரிவிக்கும் போது, நீதிமன்றம் நிபந்தனைகளின் படியும் அனுமதியின் படியும் விதிமுறைகளை கடைப்பிடித்து மாநில, மாவட்ட சங்க விதிமுறைகள் படி பந்தயம் நடைபெறும். எனவும் கண்டிப்பாக இரு சக்கர வாகனங்களுக்கு அனுமதி கிடையாது எனவும் மேலும் பந்தயம் குறித்த நேரத்தில் நடைபெறும், எனவும் மேலும் விழாக் குழுவினரின் தீர்ப்பே இறுதியானது என்ற நீதிமன்ற விளையாட்டு முறைகள் அறிவிக்கப்பட்டு போட்டி துவங்க இருந்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த சேதுபாவாசத்திரம் போலீசார் இந்த போட்டி நடத்துவதற்கு அனுமதிக்க முடியாது என்று போட்டியை நிறுத்த சொல்லி உள்ளனர்.

அதற்கு விழா குழுவினர் காரணம் கேட்ட பொழுது   முறையாக காவல் துறையில் தகவல் தெரிவிக்கவில்லை என்று போலீசார் கூறியுள்ளனர்.  ஆனால் விழா குழுவினர் கூறும் பொழுது இது நீதிமன்றத்தில் உத்தரவு வாங்கி அனுமதிக்கப்பட்ட ஒரு போட்டி, இதற்கான நீதிமன்ற உத்தரவு நகல் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு நேரடியாக அனுப்பப்பட்டு அவர் மூலம் காவல் துறையில் தெரிவிக்கப்பட வேண்டும், அதன் அடிப்படையில் காவல்துறையினர் விழா குழுவினருக்கு ஒத்துழைப்பு கொடுத்து பாதுகாப்பு வழங்க வேண்டும். மாறாக தனிப்பட்ட    காரணத்தினால்,  யாரோ  தனிப்பட்டவர்களின் தூண்டுதலின் பெயரிலயே காவல்துறையினர் இந்த போட்டியை நடத்த விடாமல் தடுக்கின்றனர் என்று குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் அதனைத் தொடர்ந்து அவர்கள் சாலை மறியலில் பொது மக்கள் ஈடுபட்டனர். அத்தகவலறிந்து பட்டுக்கோட்டை வட்டாட்சியர் சுகுமார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அப் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவே மூன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நடைப்பெற்ற சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. அங்கிருந்து போராட்டத்தில் ஈடுப்பட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதனால் பட்டுக்கோட்டை -சேது பாவாசத்திரம் பட்டுக்கோட்டை ராமேஸ்வரம் பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பு சீர் நிலைக்கு வந்தது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here