பொன்னேரி, மார்ச். 28 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த தேவம்பட்டு அம்பேத்கர் நகர் பகுதியில் கடந்த மாதம் பாரதிய ஜனதா கட்சியின் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கல்வெட்டும் திறக்கப்பட்டது.

இந்நிலையில் ஒரு மாத காலம் கடந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிக்கை வெளியிடப்பட்டது. அதனால் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி கொடிக்கம்பம் இறக்கப்பட்டு கல்வெட்டு துணியால் சுற்றி மூடி வைக்கப்பட்டிருந்தது.

நேற்று இரவு கோளூர் கிராமத்தை சேர்ந்த பாலீஸ்வரன் என்பவர் கல்வெட்டு மீது இருந்த துணியினை அகற்றி எரிந்து விட்டு கல்வெட்டினை இடிக்க ஆரம்பித்துள்ளார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்களும் பாஜக நிர்வாகிகளும் வந்ததும் இடிப்பதை நிறுத்தி விட்டு அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து தகாத வார்த்தைகளால் திட்டி அங்கிருந்து கிளம்பி சென்றாதக கூறப்படுகிறது.

மேலும் அச்சம்பவம் குறித்து பாஜகவினர் சம்பந்தப்பட்ட பாலீஷ்வரன் மீது கும்மிடிப்பூண்டி காவல்துறைக்கும் பாஜகவின் மேல் இடத்திற்கும் தகவல் கூறினார். தகவலின் அடிப்படையில் மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையிலான பாஜகவினர் ஏராளமானோர் அப்பகுதிக்கு விரைந்து வந்து பாதிப்படைந்த கொடி கம்பத்தை பார்வையிட்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. மேலும் அச்சம்பவத்தில் ஈடுப்பட்டவரை கைது செய்ய வலியுறுத்தி கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் பாஜக சார்பில் புகார் அளித்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here