கும்பகோணம், பிப். 20 –
கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் பேரூராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகளை கண்டித்தும், செயல் அலுவலரை பணியிடம் மாற்றம் செய்ய வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தை கட்சியினர் அவ்வலுவலகத்தை முற்றுகையிட்டும் கோரிக்கை முழக்கங்கள் எழுப்பியும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
திருவிடைமருதூர் தாலுகா சோழபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ராமானுஜபுரம் பிள்ளையார் கோவில் தெருவில் கடந்த 60 ஆண்டு காலமாக வசித்து வந்த இரண்டு குடும்பங்களை சேர்ந்த துப்புரவு பணியாளர்களை ஜாதிய வன்மத்தோடு சட்டத்துக்கு புறம்பாக அங்கிருந்து காவல்துறை உதவியோடு அப்புறப்படுத்திய சோழபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகவள்ளி மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் மேலும் இச்செயலில் ஈடுப்பட்ட செயல் அலுவலர் சண்முகவள்ளியை உடனடியாக இடமாற்றம் செய்ய வலியுறுத்தியும், மேலும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அப்பேரூராட்சி நிர்வாகம் ராமானுஜபுரம் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவில் 60 ஆண்டு காலமாக வசித்து வந்த துப்புரவு தொழிலாளர்கள் குடும்பத்திற்கு மாற்று இடம் வழங்காத்தைக் கண்டித்தும், மேலும் இப்பிரச்சினையில் தாமதிக்காமல் உடனடி நடவடிக்கையை எடுக்க வலியுறுத்தியும் கோரிக்கை முழக்கங்களை எழுப்பி அவர்கள் பேரூராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மேலும், இப்போராட்டம் விடுதலை சிறுத்தை கட்சி பேரூராட்சி செயலாளர் கரிகாலன் தலைமையில் நடைபெற்றது. இந்த முற்றுகை போராட்டத்தில் மண்டல செயலாளர் விவேகானந்தன் ஒன்றிய செயலாளர் காசி தமிழ் ஒன்றிய துணை செயலாளர் சக்திவேல் விவசாய பாதுகாப்பு அணி மாநில பொருளாளர் வெண்மணி சட்டமன்ற தொகுதி செயலாளர் முல்லைவளவன் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை ஒன்றிய துணைச் செயலாளர் ஞானசேகர் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தை தொடர்ந்து அப்பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.