சென்னை, நவ. 18 –

செய்தி தொகுப்பு சோழிங்கநல்லூர் கண்ணன்

சென்னை அருகே மின்கசிவு ஏற்பட்டு வீட்டிலிருந்த எல்இடி டிவி உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் தீயில் முற்றிலும் எரிந்து சாம்பலானது. மேலும்  தீ பரவாமல் அப்பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் ஓடிவந்து தீயை அணைத்ததால் பெரும் பொருட்சேதம் தவிர்க்கப்பட்டது.

.சென்னையை அடுத்த சித்தாலபாக்கம் பகுதியில் சௌந்தர் என்பவர் இரண்டு அடுக்குமாடி வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்றிரவு முதலே கனமழை பெய்து வருவதால் வீட்டின் இரண்டாம் தளத்தில் குடும்பத்துடன் பாதுகாப்பாக இருந்துள்ளார்.

இந்நிலையில் வீட்டின் முதல் தளத்தில் ஆட்கள் யாரும் இல்லாத சூழலில் அத்தளத்தில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. மின் கசிவால் வீட்டிலிருந்த எல்.இ.டி.டிவி உள்ளிட்ட பொருட்கள் தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. வீட்டிலிருந்து கரும்புகை வெளியயேறுவதை அறிந்த வீட்டின் உரிமையாளர் பதறிக்கொண்டு கீழே வந்து பார்த்தபோது வீடு முழுவதும் கரும்புகையாகவும் வீட்டினுள் ஒரு பகுதி தீ பற்றி எரிந்து கொண்டிருந்ததை பார்த்து உதவிக்காக அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களை அழைத்துள்ளார்.

தகவல் அறிந்து அப்பகுதி இளைஞர்கள் விரைந்து வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். வீடு முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால் தீயை அணைக்க முயன்றவர்களுக்கு மூச்சு தினறல் ஏற்பட்டது. இருப்பினும் தொடர்ந்துப் போராடி தீயை அணைத்து பெரும் சேதம் ஏற்பட இருந்ததை தடுத்தனர்.

இத் தீவிபத்தால் வீடு முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது தீ விபத்து ஏற்படும் போது வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் இவ்விபத்தில் வீட்டில் இருந்த பல்வேறு பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலாகியது. குறிப்பிட்ட அளவில் பொருட் சேதம் ஏற்பட்டுள்ளது என தெரிய வருகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here