சென்னை,நவ.11-

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  தனது இரங்கல் செய்தியை தெரிவித்து உள்ளார்.

இன்று வெளியிட்டுள்ள அவரது இரங்கல் செய்தியில் பின்வருமாறு தெரிவித்துள்ளார். முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையரும், ஓய்வு பெற்ற மூத்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரியுமான திரு. டி.என். சேஷன் அவர்கள் உடல் நலக்குறைவால்  10.11.2019 அன்று காலமானார் என்ற, செய்தியை அறிந்து நான் மிகுந்த  வேதனை அடைந்தேன். திரு. சேஷன் அவர்கள் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாக பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர்.

மேலும், இவர் தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றிய காலகட்டத்தில், தேர்தல் நடைமுறைகளில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டுவந்தவர் என்ற பெருமைக்குரியவர். தமிழ்நாடு அரசின் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளை வகித்தவர். திரு. சேஷன் அவர்கள் சிறந்த நிர்வாகியாகவும் கடின உழைப்பாளியாகவும், அனைவரிடமும் அன்பாக பழகும்  தன்மையுடையவராகவும் திகழ்ந்தவர் என்றும், இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் திரு. சேஷன் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை  பிரார்த்திக்கிறேன். என அவரது இரங்கல் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.  

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here