கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை பத்திரிக்கைகள், ஊடகங்கள் மீதுப் போடப்பட்ட 90 அவதூறு வழக்குகளை திரும்ப பெற தமிமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசாணை பிறப்பித்துள்ளார். அவ்வாணையில் பின்வருமாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

சென்னை, ஜூலை 29-

2012 ஆம் ஆண்டு முதல் 2021 பிப்ரவரி மாதம் வரை அரசு சார்பில் பத்திரிக்கை செய்தி ஆசிரியர்கள், அச்சிட்டவர்கள், பேட்டி அளித்தவர்கள்  மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் மீதுப் போடப்பட்ட 90 விதமான அவதூறு வழக்குகளை திரும்ப பெற முதலமைச்சர் அரசாணை ஒன்றை இன்று பிறப்பித்துள்ளார்.   

90 வழக்குகளில் தி.இந்து நாளிதழின் ஆசிரியர் மீது 4 வழக்குகளும், டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் ஆசிரியர் மீது 5 வழக்குகளும், எக்னாமிக்ஸ் டைம்ஸ் நாளிதழின் ஆசிரியர் மீது 1 வழக்கும், தினமலர் நாளிதழின் ஆசிரியர் மீது 12 வழக்குகளும், ஆனந்த விகடன் வார இதழின் ஆசிரியர் மீது 9 வழக்குகளும், ஜூனியர் விகடன் இதழின் ஆசிரியர் மீது 11 வழக்குகளும், நக்கீரன் இதழின் ஆசிரியர் மீது 23 வழக்குகளும், முரசொலி நாளிதழின் ஆசிரியர் மீது 17 வழக்குகளும், தினகரன் நாளிதழின் ஆசிரியர் மீது 4 வழக்குகளும் போடப்பட்டிருந்தன. மேலும் புதிய தலைமுறை, நியூஸ் 7, சத்யம், கேப்டன் டிவி, என்.டி.டி.வி, டைம்ஆப் நவ், மற்றும் கலைஞர் டிவி, தொலைக்காட்சி  ஆகியவற்றின் ஆசிரியர்கள் மீது தலா ஒரு வழக்குகள் வீதம் 7 வழக்குகளும் போடப்பட்டிருந்தன.

ஏற்கனவே தேர்தல் நேரத்தில் திமுக தேர்தல் அறிக்கையில் பத்திரிக்கையாளர்கள் மீது பழி வாங்கும் நோக்கத்தில் போடப்பட்ட அவதூறு வழக்குகள் அனைத்தும் திரும்ப பெறப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பத்திரிக்கையாளர்கள் மீது போடப்பட்ட 90 வழக்குகளைத் திரும்ப பெறுவதற்கு இன்று முதலமைச்சர் ஸ்டாலின் ஆணைப் பிறப்பித்து உள்ளார்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here